தற்போது புற்றுநோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் மார்பக புற்றுநோயால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 30 வயதுள்ள 229 பெண்களில் ஒருவருக்கும், 40 வயதுள்ள 68 பெண்களில் ஒருவருக்கும், 50 வயதில் 37 இல் ஒருவருக்கும் நிச்சயம் மார்பக புற்றுநோயானது இருக்கிறது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பொதுவாக மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சொல்லப்போனால், இதை ஒரு பரம்பரை நோய் என்றும் சொல்லலாம். ஆகவே இத்தகைய நோய் வருவதற்கு முன்பே, அதனை வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த நோய் ஒருசில பழக்கவழக்கங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளின் மூலமாகவும், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. உதாரணமாக, உணவுக்கட்டுப்பாடு இல்லாதால் உடல் எடை அதிகரித்தல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவையும் மார்பக புற்றுநோயை அதிகரிக்கும்.
சரி, இப்போது அத்தகைய மார்பக புற்றுநோயை தடுப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!
- தினமும் 30-45 நிமிடம் உடற்பயிற்சியை செய்தால், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியாக குறைகிறது. குறிப்பாக தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
- உடலுக்கு தகுந்த எடை இல்லாமல் அதிகமாக இருந்தால், அதுவும் 18 வயதிலிருந்து சரியாக இல்லாவிட்டால், மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடை அதிகரித்தால், அந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து, புற்றுநோய் உண்டாகும்.
- கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய் மற்றும் பல எண்ணெய்களை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், புற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே உணவில் கொழுப்பு இல்லாத எண்ணெய்களான ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய்களை சேர்ப்பது மிகவும் நல்லது.
- பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இவை புற்றுநோயை உண்டாவதைத் தடுக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே கரோட்டினாய்டு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் உடலில் கரோட்டினாடு குறைவாக இருந்தால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் உள்ளது. எனவே தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், கேரட், தக்காளி, தர்பூசணி மற்றும் கீரைகள் போன்றவற்றை தவறாமல் சேர்ப்பது நல்லது.
- சோயா பொருட்களை அதிகமான அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியும். ஏனெனில் அதில் உளள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் தாக்கத்தை குறைத்துவிடும். எனவே பெண்கள் சோயா பொருட்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
- தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டும் நல்லதல்ல, தாய்க்கும் தான். இதனால் ஈஸ்ட்ரோஜனின் அளவு சீராக இருக்கும். எனவே தாய்ப்பால் கொடுத்தால், மார்பக புற்றுநோய் வருவதைத் தவிர்க்கலாம்.
- புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அது மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரத்தில், மார்பக புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை பெண்கள் தவிர்ப்பது நல்லது.