சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள ட்விட்டர் தளம் ஏற்கெனவே ஹேஷ் [#] என்ற குறியீட்டை பயன்படுத்திவந்தது. அதை பின்பற்றும் விதமாகவே ஃபேஸ்புக் நிறுவனமும் இந்த குறியீட்டை பயன்படுத்தவுள்ளது. ட்விட்டரில், இந்த # குறியீட்டை செய்தியை குறிப்பிடுவதற்கு முன் பயன்படுத்துவார்கள். இதை விரைவில் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமெரிக்காவின் மிக முக்கியமான பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது ஃபேஸ்புக் # குறி முறையை விரைவில் அறிவிக்கும் எனவும், பல மாறுதல்கள் இதில் செய்யப்படும் எனவும் பெயர்சொல்ல விரும்பாத ஃபேஸ்புக் பணியாளர் ஒருவர் தெரிவித்ததாகவே அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதில் எந்த அளவிற்கு உண்மையுள்ளது, எப்பொழுது ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்.