கூகுளின் புதிய விளம்பர யுக்தி

கணனி தொடர்பான விற்பனை மற்றும் சேவைகளில் அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் அதிநவீன வளர்ச்சியுடன் முதன்மை பெற்று திகழ்கின்றது. இந்நிறுவனம் தங்களுடைய புதிய விளம்பர உத்தியான கலை, நகலெடுத்தல் மற்றும் குறியீடு தொடர்புகளை சிறப்பிக்கும் வண்ணம் புதுமைகளைப் புகுத்தி வருகின்றது.கூகுள் கண்ணாடி மூலம் கைகளின் உதவி இல்லாமல், வலைத்தள தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்று காட்டிய
இந்நிறுவனம் தற்போது பேசும் காலணிகள் மூலம் தங்களது விளப்பர உத்தியை வெளியிட்டுள்ளது.

அடிடாஸ் நிறுவனத்தின் விளையாட்டுக் காலணிகளைத் தேர்வு செய்து, சிறிய கம்ப்யூட்டர், ஆக்சிலரோமீட்டர், கைராஸ்கோப், அழுத்தத்தைக் குறிக்கும் சென்சார்கள், ஒலிபெருக்கி மற்றும் புளூ டூத் போன்றவற்றை கூகுள் நிறுவனம் பொருத்தியுள்ளது. ஒருவர் இந்தக் காலணிகளை அணிந்துகொண்டால், அவர்கள் செய்துகொண்டிருப்பதை புளூ டூத் மூலம் அவரின் தொலைபேசிக்கோ, ஒலிபெருக்கி மூலம் அவருக்கோ தகவல் பெறமுடியும்.

இந்த முயற்சி ஒருவர் தான் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் வலைத்தளத்தில் தகவல்கள் கூறலாம் என்பதை தெரிவிப்பதாக, இந்த விளம்பர மையத்தின் அதிகாரி, அமான் கோவில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இதனை நகலெடுத்து உருவகப்படுத்தினால், இந்தக் காலணிகள் பேசும் தன்மை கொண்டவையாக இருக்கும் என்றார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget