ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்


யுகே, யுஎஸ்ஏ யில் பரதேசி வெளியாகியிருக்கிறது. சென்னையில் முன்னணி நடிகர்களின் - அ‌ஜித், சூர்யா, விஜய் - படங்களுக்கு நிகரான ஓபனிங்கை பெற்றிருக்கும் படம் வெளிநாடுகளில் எப்படி எதிர்கொள்ளப்படுகிறது? யுகே யில் முதல் மூன்று தினங்களில் 21 திரையிடல்களில் 19,635 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. ரூபாயில் சுமார் 16.08 லட்சங்கள்.

டேவிட் ஏழாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இப்படம் 12.34 லட்சங்களை வசூலித்துள்ளது.

யுஎஸ்ஏ யில் பரதேசி 19 திரையிடல்களில் 41,634 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது ரூபாய் மதிப்பில் சுமார் 22.48 லட்சங்கள்.

வத்திக்குச்சி இரண்டு திரையிடல்களில் 1,206 டாலர்கள். சுமாராக 65,117 ரூபாய்கள்.

விஸ்வரூபம் இரண்டு திரையிடல்களில் 577 டாலர்களை சம்பாதித்துள்ளது. இதுவரை இப்படம் 5.62 கோடிகளை வசூல் செய்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்