கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

5. மறந்தேன் மன்னித்தேன்
தெலுங்கு டப்பிங்கான இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 2.29 லட்சங்கள். மிகச்சுமாரான ஓபனிங்.

4. கருப்பம்பட்டி
இதுவும் மறந்தேன் மன்னித்தேன் அளவுக்கே வசூலித்துள்ளது. மூன்று தினங்களில் 2.73 லட்சங்கள். தயா‌ரிப்பாள‌ரின் தூக்கத்தை காவு வாங்கும் வசூல்.


3. விஸ்வரூபம்
ஏழு வாங்கள் முடிவில் 11.9 கோடிகளை விஸ்வரூபம் வசூலித்துள்ளது. துப்பாக்கி வசூலை எட்ட இன்னும் சில கோடிகள் வசூலிக்க வேண்டும்.
சென்ற வார இறுதியில் இதன் வசூல் 3.9 லட்சங்கள். வார நாட்களில் 3.1 லட்சங்கள்.

2. வத்திக்குச்சி
வார இறுதியில் 38 லட்சங்களையும், வார நாட்களில் 39.8 லட்சங்களையும் வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 1.4 கோடி.

1. பரதேசி
அதே முதலிடத்தில் பரதேசி. படத்துக்கு கிடைத்த பாஸிடிவ்வான விமர்சனம் படத்தின் கலெக்சனை அதிக‌ரித்திருக்கிறது. முதல் வார இறுதியில் 1.45 கோடியை வசூலித்த படம், இரண்டாவது வார இறுதியில் 1.1 கோடியை வசூலித்துள்ளது. வார நாட்களில் வசூல் 90 லட்சங்கள். இதுவரை 3.45 கோடிகளை வசூலித்து தயா‌ரிப்பாளரையும் படத்தை வாங்கியவரையும் காப்பாற்றியிருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்