
வேலை வார நாட்களில் 5 மணிநேரமே இரவில் தூங்குபவர்கள் விழ்த்திருக்கும் நேரத்தில் ஏதாவது சாப்பிட்டு கொண்டே இருப்பதால் உடல் எடை கூடுகிறது என்கிறார் அமெரிக்க ஆய்வு மருத்துவர்.
கொலராடோ பல்கலைக் கழக பரிசோதனை நிலையத்தின் ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
தூக்கமின்மையால் மட்டுமே உடல் எடை கூடுவதில்லை. அதே போல் கூடுதல் தூக்கத்தினால் உடல் எடையும் குறைவதில்லை. ஆனால் விழித்திருக்கும் நேரத்தில் அதிக சக்தி தேவைப்படும் எனவே எதையாவது தின்று கொண்டேயிருப்போம் இதனை எரிக்க அதிக கலோரி தேவைப்படும். இவ்வாறு நீண்ட நாட்கள் இருந்தால் உடல் எடை கூடுவது என்பது கண்கூடாக தெரியவந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
உடல் எடைகூடுதலும் கன்னாபின்னாவென்று உடல் பருமனாவது நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதான சமன்பாட்டில் இல்லை. இது மிகவும் சிக்கலான பரிமாணம் கொண்டது என்கிறார் ஆய்வை நடத்திய கெனெத் ரைட்.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் முதல் 3 நாடகள் 9 மணி நேரம் தூங்கினார்கள் பிறகு எழுந்து உணவு எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான கலோரிகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அதன் பிறகு பங்கேற்பாளரகள் இருபிரிவினராக பிரிக்கப்பட்டனர்.
இதில் ஒரு பிரிவு 5 மணி நேரமே தூங்க பணிக்கப்பட்டது. மற்ற பங்கேற்பாளர்கள் 9 மணிநேர தூக்கத்தை தொடர்ந்தனர்.
இருதரப்பினருக்கும் பழங்கள், பிஸ்கட்கள், தயிர், ஐஸ் கிரீம், உருளைக் கிழங்கு வருவல் என்று கொடுக்கபட்டது. 9 மணிநேரம் தூங்கியவர்களுக்கு 6% கூடுதல் கலோரி எடுத்துக் கொண்டனர். ஆனால் 5 மணிநேரம் தூங்கியவர்கள் இந்த நொறுக்குத் தீனியை எரிக்க கூடுதல் 5% சக்தி தேவைப்பட்டது.
சுவையான விஷயம் என்னவெனில் ஒரு தனி முழு உணவை விட மாலை வேளைகளில் எடுத்துக் கொண்ட நொறுக்குத் தீனிகளை எரிக்க கூடுதல் கலோரி தேவைப்பட்டது.
ராத்திரியில் தூங்காமல் தின்று கொண்டேயிருப்பது உடல் எடை அதிகரிக்க காரணம் என்று கண்கூடாக தெரியவந்தது.
நம் உடல் இரவு வேளைகளில் எக்கச்சக்கமான உணவு எடுத்துக் கொள்ள நம்மை அனுமதிப்பதில்லை. ஆண்கள், பெண்கள் இருதரப்பினரும் குறைந்த நேர தூக்கத்துடன் நொறுக்குத் தீனியும் எடுத்துக் கொள்வது உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது என்று இவர்கள் நிரூபித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முழு விவரம் நேஷனல் அகாடமி ஆஃப் சயன்சில் வெளியாகியுள்ளது.