ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதில் ஒன்றை இங்கு பார்க்கலாம்.
பி-ஸிப் (PeaZip):
Zip துணைப் பெயர் மட்டுமின்றி, மற்ற துணைப் பெயர்களுடனும் சுருக்கப்பட்ட பைல்களைத் தரும் புரோகிராம்கள் உள்ளன. பி-ஸிப் புரோகிராம் இவற்றை எளிதாகக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 7z, Arc, Bz2, Gz, Paq, Pea, Quad/Balz, Tar மற்றும் Upx ஆகிய பார்மட்களில் சுருக்கிய பைல்களைத் தருகிறது.
இவை மட்டுமின்றி, Ace, Arj, Cab, Dmg, Iso, Lha, Rar மற்றும் Udf ஆகிய துணைப் பெயருடன் சுருக்கப்பட்ட பைல்களையும் விரித்து பைல்களாகத் தருகிறது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. புரோகிராமினை இலவசமாகப் கிடைக்கிறது.
இயங்குதளம்: Win 98/ME/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:7.30MB |