இபொழுதெல்லாம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம். மெனக்கெடாமல், அலுவலகம்கூட செல்லாமல் வெறும் இணையம் மட்டுமே இருந்தால் பணம் சம்பாதிப்பது மிகவும் எளிதாகிறது. பல இளைய தலைமுறையினர் இம்முறை மூலமாக மாதத்திற்கு சில லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள் என்பதும் உண்மையே! சிலர் தாங்களாகவே ஒரு இலவச இணையதளத்தை உருவாக்கி அதன் வாயிலாகவும் தினமும் ஆயிரங்களில் சம்பாதிப்பதும் நிதர்சனம்.
எல்லோராலும் முடிவது நம்மால் முடியாதா? எப்படி இணையம் மூலமாக பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை எங்களுக்கு தெரிந்த அளவில் வழங்கியுள்ளோம். தகவல்கள் கீழே!
கூகுள் ஆட்சென்ஸ் : நீங்கள் சாதாரண இணையதளம் அல்லது ப்ளாக் வைத்திருந்தாலே கூகுள் நிறுவனத்தின் 'ஆட்சென்ஸ்' முறையில் லட்சங்களில் கூட வீட்டிலிருந்தே சமாதிப்பது எளிது. எனக்குத்தெரிந்த நண்பரொருவர் இம்முறையில் தினம் ஆயிரங்களில் சம்பாதிப்பதை கண்கூடாக பார்க்க நேர்ந்தது. கூகுள் ஆட்சென்ஸ் தளம் செல்ல...
புத்தகங்களை இணையத்தில் விற்கலாம் : புத்தகங்களை இணையத்தில் விற்கலாம். நீங்கள் நல்ல எழுத்தாளர் என்றால் உங்களுடைய படைப்புகளை இணையம் வாயிலாக விற்க முடியும். இது இப்பொழுது மிகவும் எளிதாகியுள்ளது.
Affiliate : பல்வேறு இணையதளங்களில் Affiliate என்ற வார்த்தையை பார்த்திருப்பீர்கள். இம்முறையிலும் சம்பாதிக்கலாம். பிலிப்கார்ட் போன்ற இணையதளங்கள் கூட இந்த சேவையை தருகிறது.
சமூக வலைத்தளங்கள் : சமூக வலைத்தளங்கள் வாயிலாக நிறைய நண்பர்களை உருவாக்கி, குறிப்பிட்ட பொருள்களை எளிதில் விற்கலாம்.
நெட்வொர்க் மார்க்கெட்டிங் : இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை MLM என்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் சேர்ந்தபின் உங்கள் நண்பரை அந்நிறுவனத்தில் சேர்த்துவிட்டால், உங்களுக்கு கமிஷன் அடிப்படையில் பணம் கிடைக்கும்.
வெப்சைட்: ஒரு வெப்சைட் மட்டும் இருந்தால் போதும், லட்சங்கள் கூட மிகவும் எளிதாகிவிடும். ஒரு வெப்சைட் மட்டுமே வைத்து மிகப்பெரிய இடங்களுக்கு சென்றவர்கள் இங்கே நிறையவே இருக்கிறார்கள். ஐடியா மட்டுமே முக்கியம். உதாரணத்திற்கு ஃபேஸ்புக் தளம்!
ப்ளாக்: சாதாரண ப்ளாக் மட்டுமே வைத்துக்கொண்டும் கூகுள் ஆட்சென்ஸ் வழியாகவும் சம்பாதிக்கலாம்.