நேர்த்தியான வாழ்கைக்கு எளிதான வழிமுறைகள்

* வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே எப்பொழுதும் சிந்தியுங்கள். 

* கடந்த காலங்களில் செய்த தவறுகளைப் பற்றி வருத்தப்படாதீர்கள். மற்றும் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்களது கையில் இருக்கும் நிகழ்காலத்தை
வெற்றியாக்குவதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். 

* நீங்கள் உங்களது வாழ்க்கையை பிறருடன் ஒப்பிட்டு கவலைப்படாதீர்கள். 

* உங்களை புரிந்து கொண்டவர்களே உங்களுடைய நண்பர்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களிடமிருந்து விலை எதுவும் பெறாமல் மனோதத்துவ மருத்துவரைப் போன்று உங்களது குறைகளின் பக்கம் உங்களின் கவனத்தைக் கொண்டு செல்கின்றார்கள். 

* உங்களுக்கு துக்கம் கொடுக்கக் கூடியவரை மன்னித்து விடுங்கள், அதனை மறந்தும் விடுங்கள். 

* அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முயற்சித்து குழப்பமடைய வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு பிரச்சனையை மட்டுமே தீர்க்க முற்படுங்கள். 

* முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் உங்களது கவலைகளை மறக்கக்கூடும். 

* வரக்கூடிய பிரச்சனை களைப்பார்க்கக்கூடிய கண்ணோட்டத்தை மாற்றுவதன் மூலம் நீங்கள் துக்கத்தை சுகமாக மாற்றம் செய்ய முடியும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget