பாக்ஸ் ஆபிசை வேட்டையாடிய சேட்டை


சென்னையில் ஒரு நாள் சென்ற வார இறுதியில் 28 லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழ்ப் புத்தாண்டை யொட்டி பெ‌ரிய புதிய படங்கள் எதுவும் வெளியாகததும் இதற்கு ஒரு காரணம். வார நாட்களில் இதன் வசூல் 28.16 லட்சங்கள். இதுவரை சென்னையில் 2.16 கோடியை வசூலித்துள்ளது. ஓபனிங் எல்லாம் நல்லாயிருக்கு ஃபினிஷிங் ச‌ரியில்லையே
கதைதான் கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கு. சிலர் எழுதிய விமர்சனங்கள் படம் ஆறு கோடியை அனாயாசமாக தாண்டும் என்பது போலவே இருந்தது. ஆனால்...? சென்ற வார இறுதியில் 45 லட்சங்களையும், வார நாட்களில் 49.6 லட்சங்களையும் வசூலித்துள்ள படம், இதுவரை 3.6 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது.

சேட்டையின் வேட்டை தொடர்கிறது. ஆச்ச‌ரியம்தான். இந்தப் படம் இரண்டு வாரங்களில் சென்னையில் மட்டும் 4.3 கோடிகளை வசூலித்திருக்கிறது. வார இறுதியில் இதன் வசூல் 1.31 கோடி. வார நாட்களில் 1.6 கோடி. இந்த வாரம் சேட்டைக்குதான் முதலிடம். 

வெள்ளிக்கிழமை உதயம் வெளியாவதால் பாக்ஸ் ஆஃபிஸில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்