மொஸில்லாவின் மொபைல் இயங்கு தளம்


பயர்பாக்ஸ் பிரவுசர் தந்து பிரபலமான மொஸில்லா, தற்போது மொபைல் போன்களில் இயங்க, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றினைத் தருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களின் செல்வாக்கு குறைய இருக்கிறது. அடுத்த நூறு கோடி மொபைல் பயனாளர்கள் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத்தான் பயன்படுத்துவார்கள்
என மொஸில்லா அறிவித்துள்ளது. ஆனால், இந்திய பயனாளர்களுக்கு இந்த 2013 ஆம் ஆண்டில், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்காது என்றே தோன்றுகிறது. மொஸில்லா, பல நாடுகளில் இயங்கும் 18 மொபைல் போன் இயக்கும் நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில், எந்த நிறுவனத்துடனும் அத்தகைய ஒப்பந்தத்தினை மேற்கொள்ளவில்லை. ஜூலையில் வர இருக்கும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிரேசில், கொலம்பியா, ஹங்கேரி, மான்டெனக்ரோ, போலந்து, செர்பியா, ஸ்பெயின், வெனிசுலா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்த, மொபைல் போன் பிரிவில் வேகமான வளர்ச்சியினை மேற்கொண்டிருக்கும் நாடுகளை இலக்காகக் கொண்டிருப்பதாக மொஸில்லா அறிவித்துள்ளது. இந்திய மொபைல் போன் பயனாளர் எண்ணிக்கை 25 கோடியே 10 லட்சத்தினை இந்த ஆண்டில் எட்டப்போவதாக, கார்ட்னர் நிறுவனம் தன் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஸ்மார்ட் போன் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சமாக உயர இருப்பதாகவும் இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. 
மொஸில்லா இந்தியச் சந்தையைத் தற்போதைக்கு ஒதுக்கி இருப்பதற்குக் காரணம், மற்ற நாடுகளில் உள்ளதைப் போல, இங்கு இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்கள், மொபைல் போன்களைத் தங்கள் சேவைத் திட்டங்களுடன் இணைத்து, குறைந்த விலையில் வழங்குவதில்லை. (அமெரிக்காவில் ஐ போன் 4, ரூ.10,000 என்ற அளவில் பெற்றுக் கொள்ளலாம்; ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு, அதனை விற்பனை செய்திடும் சேவை நிறுவனத்தின் மொபைல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தியாவில் எந்த நிறுவன சேவையையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஐ போன் கிடைக்கிறது. ஆனால் விலை ரூ.43,000 ஐத் தாண்டுகிறது)
எனவே, இந்தியாவில், மொஸில்லா தன் ஆப்ப@ரட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களைத் தானே விற்பனை செய்திட வேண்டும். அது ஒரு பெரிய பிரச்னையாக மொஸில்லா கருதுகிறது. இருப்பினும் தாமதமாகவே இந்தியாவில் மொஸில்லா நுழையலாம். இது அதற்கு வழக்கமே. பயர்பாக்ஸ் பிரவுசரைத் தாமதமாகத்தான் மொஸில்லா அறிமுகம் செய்தது. ஆனாலும், அனைத்து பிரவுசர்களுக்கும் அது சரியான போட்டியைத் தந்து வருகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget