முத்து நகரம் திரை முன்னோட்டம்

எல்.ஏ.சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.முருகன் தயாரிக்கும் படம் `முத்து நகரம்'. இதில் நாயகர்களாக விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன், அரசு நடிக்கின்றனர். நாயகியாக அஸ்ரிக் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நந்தா சரவணன், காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன், பூவிதா, செவ்வாழைராஜி, கவிதாபாலாஜி, மது, ஸ்ரீகவி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி கே.திருப்பதி இயக்குகிறார். இவர் பல இயக்குனர்களிடம் இணை மற்றும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிறக்கும் போது யாரும் குற்றவாளி இல்லை. வளர்ந்த பிறகும் குற்றவாளிகளாக விரும்புவது இல்லை. சூழ்நிலைகளே குற்றவாளியாக்கிறது.
இந்த கருத்தை படத்தில் பதிவு செய்துள்ளோம் என்றார் இயக்குனர். படப்பிடிப்பு தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், குலசேகரப் பட்டிணம், கயத்தாறு போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. இசை: ஜெய்பிரகாஷ், ஒளிப்பதிவு: சூர்யா, எடிட்டிங்: ராஜ்கீர்த்தி, ஸ்டண்ட்: பயர்கார்த்திக், பாடல்: ஜெயமுரசு, கவின்பா, நடனம்: பால குமார் ரேவதி, தயாரிப்பு மேற்பார்வை: ஜெ.வின்னி.