நான் ராஜாவாக போகிறேன் சினிமா விமர்சனம்


பிருத்வி ராஜ்குமார் இயக்கத்தில் நகுல் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் நான் ராஜாவாகப் போகிறேன். நகுலுடன் சாந்தினி, அவனி மோதி ஆகியோரும் நடித்துள்ளனர். இமாச்சல் பிரதேசத்தில் அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வரும் நகுலின் பெயர் ஜீவா. அமைதியான சூழ்நிலையில் அன்புடன் வளர்ந்து
வரும் ஜீவா அங்கு ஒரு இராணுவ அதிகாரியை சந்திகிறார். அவர் மூலமாக தன்னைப் போலவே ஒருவன் சென்னையில் இருக்கிறான் என்ற உண்மை ஜீவாவுக்கு தெரியவருகிறது. தன்னை போல்வே இருப்பவனை பார்க்க வேண்டும் என்று இயற்கையாக ஏற்படும் ஆர்வத்தில் சென்னைக்கு கிளம்புகிறார் ஜீவா. 

ராஜாவை சந்திப்பதற்கு முன் அவனைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பி ராணுவ அதிகாரியிடமிருந்து பெற்ற தகவலின் மூலம் ராஜாவின் ஒருதலைக் காதலியை சந்தித்து உண்மையை சொல்லுகிறார். ஒரே மாதிரி இருவரா? என வியக்கும் ஹீரோயின் ரீமா(அவனி மோதி) ஜீவாவுடன் ராஜாவை சந்திக்க பயணமாகிறார். 

சென்னையைச் சென்றடைந்ததும் ராஜாவுக்கும், வள்ளிக்கும் இடையே இருந்த காதல் பற்றியும், ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் கொல்ல துரத்தியதும் ராஜாவின் நண்பன் மூலமாக தெரிய வருகிறது ஜீவாவுக்கு. வள்ளியைக் கொலை செய்ய வரும் கும்பல் தான், அவளுக்கு துணையாய் இருக்கும் ராஜாவையும் கொலை செய்ய துரத்தி இருக்கிறது. 

ஆனால் அதற்குப் பிறகு இருவரும் என்ன ஆனார்கள் என்று தெரியாததால் மீதி கதையை தெரிந்துகொள்ள ராஜாவையும், வள்ளியையும் தேடிச் செல்லும் ஜீவா, பிறந்தநாளன்று வழக்கமாக ராஜா செல்லும் மனநல மருத்துவமனைக்குச் செல்கிறார். 

அங்கு வள்ளியை பரிதாபகரமான நிலையில் சந்திக்க முழுக் கதையும் வெளியாகிறது. மாற்று விதைகள் எனப்படும் செயற்கை விதைகளால் மனித இனத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை எடுத்துக் கூறுகிறார் மணிவண்ணன்.

மாற்று விதை இறக்குமதி தொழிலில் புகழ் பெறு விளங்கும் வில்லன் மணிவண்ணனை கொலை செய்ய, வள்ளி அதைக் கண்டுபிடித்து மணிவண்ணனின் பணியை தொடர்கிறார். வள்ளியையும் ராஜாவையும் கொலை செய்ய துரத்திய கும்பல் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்து நகுலை தலையிலும், வயிற்றிலும் கத்தியால் குத்திவிடுகிறார்கள். 

வள்ளி இதைச் சொன்னதும் தன் தலையிலும், வயிற்றிலும் இருக்கும் காயத்தைக் கண்டு ஜீவா அதிர்ச்சியடைகிறார். ராஜா, ஜீவா இரு வேறு மனிதர்களா? இல்லை இருவரும் ஒருவரா? என்ற கேள்விக்கும் வில்லன் எப்படி அழிந்தான்? என்பதற்கும் கிளைமேக்ஸில் பதில் வைத்திருக்கிறார் இயக்குனர். 

பாடல்கள் சுமார் ரகத்தில் இருந்தாலும் ரசிக்கக் கூடிய விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. வசனம் வெற்றிமாறன் என்பது டைட்டில் கார்டில் பார்த்தாலொழிய வேறு எங்கும் உணரமுடியவில்லை.  

சமூக ஆர்வலராக இருக்கும் ஹீரோயின் சரக்க போட்டு ’கலாய்ப்போம்’ என பாட்டு பாடிக்கொண்டு பார்ட்டியில் நடனமாடுவது சிறிது உறுத்தலாக இருக்கிறது.

நான் ராஜாவாகப் போகிறேன் நல்ல சப்ஜெக்ட். அந்நிய நாட்டு மாற்று விதைகள் இறக்குமதியால் மண் நாசமாவதால் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திரைப்படம். ஆனால் திரைக்கதையில் சொதப்பல் செய்துவிட்டார் இயக்குனர். கருத்துள்ள கமர்ஷியல் படமாக நான் ராஜாவாகப் போகிறேன் பார்க்கக்கூடிய திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை.

நான் ராஜாவாகப் போகிறேன் - நல்ல மெஸேஜ்! சுவாரசியமில்லை!
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget