நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது உண்மையா


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட முக்கிய திரையுலகங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை நயன்தாரா பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாதவர். பிரபுதேவாவை பிரிந்து மறுபடியும் நடிக்க வந்த நயன்தாரா, மற்ற திரைநட்சத்திரங்களை விட்டு தள்ளியே இருந்தாலும் ஆர்யாவோடு மட்டும் நல்ல விதமாக பழகியதால், ஆர்யா- நயன்தாரா இடையேயான உறவு பற்றி பலவிதமாக பேசப்பட்டுவந்தது.
இந்நிலையில் ஆர்யாவுக்கும் - நயன்தாராவுக்கும் திருமணம் நடந்துவிட்டது என ஒரு செய்தி சில நாட்களாக திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்து வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் பூனேவில் திருமணம் நடந்தது உண்மை என்றார்கள். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஆர்யாவும் நயன்தாராவும் நடித்துவரும் ’ராஜா ராணி’ திரைப்படத்தின் ஒரு முக்கியக் காட்சிக்காக இருவருக்கும் திருமணமாவது போன்ற காட்சி 3 நாட்களாக பூனேவிலுள்ள ஒரு முக்கியமான சர்ச்சில் படமாக்கப்பட்டதாம். 

இதை தூரத்திலிருந்து பார்த்த ஏதோ ஒரு ஆசாமி உண்மையான திருமணம் நடந்ததாக செய்தியை பரப்பிவிட்டதாக சிரிக்கின்றனர் ராஜா ராணி படக்குழுவினர். 

பழைய பதிவுகளை தேட