குழந்தை, குடும்பம் என எல்லாவற்றிலும் அக்கறை செலுத்தும் பெண்கள், தங்களது உடல்நிலையை கவனிக்க மறந்துவிடுகின்றனர். எனவே பெண்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.. மாதவிலக்குக் காலங்களில் நன்கு துவைக்கப்பட்டு வெயிலில் காய வைத்தத் துணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
அல்லது கடைகளில் விற்கும் பஞ்சு (அ) நாப்கின்கள் பயன்படுத்த வேண்டும். இதேப்போன்று அந்த சமயத்தில் பயன்படுத்தும் உள்ளாடைகளை நன்கு வெயிலில் காய வைத்துத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த சமயத்தில் பயன்படுத்தும் உள்ளாடைகளைத் தனியாக வைப்பது நல்லது.
சாதாரண சமயங்களில் அந்த உள்ளாடையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மாதவிலக்கு காலங்களில் 6 லிருந்து 8 மணி நேரத்திற்கு ஒரு முறை துணி அல்லது பஞ்சு (அ) நாப்கின்களை மாற்ற வேண்டும்.
இதனை ஒவ்வொரு தாய்மார்களும், தங்களது பெண் குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். காட்டன் உள்ளாடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவரது உள்ளாடைகளை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது.