நோக்கியா நிறுவனத்தைப் பற்றி ஏராளமாக சொல்லலாம். பின்லாந்தை சேர்ந்த மாபெரும் மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா பல்வேறு நாடுகளில் தனது அலுவலகங்களை அமைத்து இன்றளவிலும் விட்ட முதலிடத்தைப் பிடிப்பதில் குறியாகவே உள்ளது எனலாம். நோக்கியா நிறுவனம் சாதனங்கள் தயாரிப்பில், மொபைல் போன்கள், டேப்லெட்கள் என வடிவமைத்து அசத்திவருகிறது.
போட்டி நிறுவனங்களான சாம்சங், ஹெச்டிசி போன்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்களைப் பின்பற்றியே தற்பொழுது ஸ்மார்ட்போன்கள் பக்கமும் சென்றிருக்கிறது நோக்கியா. விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போன்கள் தற்பொழுது பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை நீங்களே அறிவீர்கள்.
இந்த நோக்கியா நிறுவனத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...
புதிதாக வெளியிட்டிருக்கும் போன்களுக்கு 'லுமியா' என பெயரிட்டுள்ளது நோக்கியா. இதன் பொருள் பின்லாந்த் மொழியில் என்னவெனில், 'பனிப்பொழிவு' என்பதாகும்.
மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனங்களிலேயே மிகவும் பழமையானது இந்த நோக்கியா நிறுவனம்தான். இது 1865ல் முதன் முதலில் தொடங்கப்பட்டது. ஆனால் முதல்முதலில் செய்தது பேப்பர் மில் பிஸினஸ். பின்னர் 1900களின் ஆரம்பத்தில் டெலிகிராஃப் மற்றும் டெலிபோன் கேபிள்களை தயாரித்தது.
பனி டயர்கள், ரப்பர் காலணிகள், வாயு முகமூடிகள், தொலைக்காட்சி பெட்டிகள், லேப்டாப் கணினிகள், டேப்லெட் கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் என கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு வியாபாரங்களில் கால்பதித்தது நோக்கியா.
நோக்கியா பின்லாந்து நாட்டில் 1971 ஆம் ஆண்டு, முதல் மொபைல் நெட்வொர்க் தொடங்கியது. 1978 முதல் 100 சதவிகித நெட்வொர்க் கவரேஜ் தருகிறது. நினைத்துப்பாருங்கள். இன்றளவிலும் நம்நாட்டில் பல்வேறு இடங்களில் இது சாத்தியமில்லை.