தி ஹேங்ஓவர் பார்ட் 3 விமர்சனம்


சின்ன பட்ஜெட்டில் தயாராகி தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபம் தரும் சர்ப்ரைஸ் படங்கள் எப்போதாவது வரும் அப்படி ஹாலிவுட்டில் தயாராகி உலகம் முழுவதும் ரவுண்ட் கட்டிய படம் தி ஹேங்ஓவர். டட் பிலிப்ஸ் இயக்கிய இந்த காமெடிப் படத்தின் முதல் இரு பாகங்களும் ஹிட்டான நிலையில் மூன்றாவது பாகத்தையும் எடுத்திருக்கிறார்கள்.
முதலிரு பாகங்களில் நடித்த அதே மூன்று நண்பர்கள். இதில் திருமணமோ, பேச்சிலர் பார்ட்டியோ இல்லை. அப்படியென்றால் எதை முன் வைத்து கதை நகர்த்தப்பட்டிருக்கிறது? இந்த ஒரு கேள்விக்காகவே படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரள்வார்கள் என்பது பரவலான நம்பிக்கை.

இன்னொரு சுவாரஸியமான தகவல், சமீபத்தில் வெளியான பிளைட் படத்தில் இரண்டே காட்சிகளில் வந்தாலும் கலக்கிய நடிகர் ஜான் குட்மேன் இதில் பிரதானமாக வருகிறார். காமெடியில் மனிதர் ஒரு கிங். முதல் பாகத்தில் நிர்வாணமாக அறிமுகமான சைனா கேங்ஸ்டர் மிஸ்டர் சௌவும் இந்தப் படத்தில் இருக்கிறார்.

மே 24 படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget