வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை


இப்போது பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். பெண்கள் வேலைக்க போவது நல்ல விஷயம். ஆனால் அதே நேரத்தில் வேலைக்கு போகும் பெண்கள் உணவு விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் ஒழுங்காக சாப்பிடாமல் போய் விடுவார்கள். இவ்வாறு வேலைக்குப் போகும் அவசரத்தில் வயிற்றில் உள்ள குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. 

ஏனெனில் வயிற்றில் இருக்கும் கருவுக்கு, அவ்வப்போது ஏதாவது தீனி கொடுத்தே ஆகவேண்டும். தரைகளில் டைல்ஸ் என்றால் அதிக கவனத்துடன் மெதுவாக நடங்கள். அவசரப்பட்டு நடந்து பின்னர் வழுக்கி விழுந்தால் சிக்கல்தான். அலுவலகத்தில் தரைத்தளம் என்றால் சிக்கல் இல்லை. 

அதுவே மாடிப்படி என்றால், கூடுதல் கவனம் தேவை. மாடிப்படி ஏறினால் கருவில் உள்ள குழந்தைக்கு அழுத்தம் அதிகமாகும். எனவே கூடுமானவரை லிப்ட் உபயோகியுங்கள். வேலை நேரத்தில் இடையிடையே சத்தான பழங்கள், காய்கறி சாலட்களை சாப்பிடலாம், ஜுஸ் பருகலாம். 

இது பணியின் சோர்வை போக்குவதோடு குழந்தைக்கும், கர்ப்பிணிக்குமான சரிவிகித சத்துக்களை நிலைநிறுத்தும். காபியில் உள்ள காஃபின், கரு குழந்தைக்கு ஆகாது. அதேபோல் சிகரெட்டில் உள்ள நிகோடின், குறைபிரசவத்துக்கு வழிவகுக்கும். எனவே காபி, சிகரெட் தவிர்த்து, ஆரோக்கிய பானங்களை பருகலாம்.

பழைய பதிவுகளை தேட