கர்ப்ப காலத்தில் கவனமாக இருப்பது எப்படி

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், பெண்கள் தங்களை கவனமாக பார்த்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் இந்த நேரத்தில் தான் கருச்சிதைவுக்கான‌ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் அதிகபட்ச ஓய்வு எடுக்க வேண்டும். கர்ப்பத்தின் போது பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எவ்வாறு கர்ப்பிணிகள் கவனமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் 

•  கர்ப்பமாக இருக்கும் பெண் என்ன சாப்பிடுகிறாளோ அதுதான் குழந்தைக்கும் செல்லும். எனவே இந்த கால கட்டத்தில் கர்ப்பிணிகள்  ஆரோக்கியமான,  ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

• கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்தால் பல நன்மைகள் கிடைக்கும். அதுவும் முதல் மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து, வந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் குறையும். ஆனால் வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் உள்ள உடற்பயிற்சிகளை செய்யலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே உடற்பயிற்சியை செய்ய வேண்டும். 

• கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் புகைப்பதோ அல்லது மது அருந்துவதோ கூடாது. இந்த இர‌ண்டு பழக்கங்களும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக குழந்தைக்குப் பிறப்பிலேயே குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

• பொதுவாக கர்ப்பிணிகளுக்கு சில மாதங்களுக்கு குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை இருப்பது இயற்கையானது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்ள கூடாது. அதற்கு பதிலாக இயற்கை முறையில் தீர்வு பெற‌ முயற்சிக்க வேண்டும். 

• கர்ப்ப காலத்தில் அதிக அளவில் தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது எட்டு முதல் பத்து டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். 

• கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் போன்ற உடல் உபாதைகள் அடிக்கடி ஏற்படும். எனவே இந்த சமயங்களில் வறுத்த மற்றும் காரமான உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

• கர்ப்ப காலத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதிலும் கர்ப்ப காலத்தில் சோகமானப் புத்தகங்கள் படிப்பதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, பிரசவம் மற்றும் குழந்தைகள் பற்றிய‌ புத்தகங்களை வாசிக்கலாம். இல்லையெனில் கர்ப்பம் பற்றிய பல்வேறு புத்தகங்களை படிக்கலாம். புத்தகம் படிக்க பிடிக்காதவர்கள் இனிமையான, மெலடி பாடல்களை கேட்கலாம். இதனால் மனஅமைதி கிடைக்கும். 

• கர்ப்ப காலத்தில் தொற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் மிகவும் எச்சரிக்கையும் இருக்க வேண்டியது முக்கியமாகும். அதனால், சுற்று வட்டாரத்தை அழகாகவும், சுத்தமாகவும் வைத்து, கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியாகக் களிக்கவும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget