மகளிருக்கான மார்பக புற்று நோய்க்கு புதிய சிகிச்சை


மார்பக புற்றுநோய் வந்தால் முன்பு மார்பகத்தை எடுத்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது புற்றுநோயின் ஆரம்ப நிலை என்றால் மார்பகம் முழுவதையும் எடுக்க வேண்டியதில்லை என்கிறார்கள், டாக்டர்கள். இந்த புதிய அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையில் உறுப்பை இழக்காமலேயே இந்த நோயை குணப்படுத்த முடியும். அந்த சிகிச்சை முறைக்கு ‘பிராக்கி தெரபி‘ என்று பெயர். இந்த முறையில் புற்றுநோய் உள்ள
பகுதியையும் அக்குள் பகுதியில் உள்ள கட்டியையும் நீக்கி மார்பக புற்றுநோயை குணப்படுத்திவிடலாம். பின்னர் ‘ரேடியேஷன் தெரடிபி‘ மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும். 

கதிர்வீச்சை சிறுசிறுகுழாய்கள் மூலம் புற்றுநோய் கட்டி உள்ள அடித்தளம் வரை உள் செலுத்தி ‘லோக்கல் ரேடியேஷன்‘ என்ற அதிக அளவு கதிர்வீச்சைத் தருவதற்குத்தான் ‘பிராக்கி தெரபி‘ என்று பெயர். இந்த சிகிச்சை மூலம் மார்பக புற்றுநோய் வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயதானவர்களுக்கு வரும் புராஸ்டேட் புற்றுநோய் போன்ற வகை நோய்களையும் குணப்படுத்தலாம். 

இதில் உள்ள நன்மை என்னவெனில் புற்றுநோய் வந்த உறுப்பை இழக்க வேண்டியிருக்காது. அழகு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. எந்த பக்க விளைவும் இந்த சிகிச்சை ஏற்படுத்தாது. ஒரு குடும்பத்தில் தாய்க்கு புற்றுநோய் இருக்கும் பட்சத்தில் அந்த ஜீன் மகனுக்கோ அல்லது மகளுக்கோ இருந்தால் அவர்களுக்கும் அந்த நோய் வாய்ப்பு உள்ளது. 

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வந்தால் பெண்களை விட வெகு விரைவாக வளர்ந்து வலுப்பெறும். ஆனால் லட்சத்தில் ஒரு ஆணுக்குத்தான் மார்பக புற்றுநோய் வரும். 

ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குழந்தை பருவத்தில் மார்பகம் வளர்த்திருந்து அவர்கள் இளைஞர்களான பின்னரும் மார்பக வளர்ச்சி குறையாமல் அப்படியே இருந்தால் அத்தகையவர்களுக்கும் அந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர். பெண்கள் தங்கள் மார்பகத்தை இழக்காமல் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்பதே பெண்களுக்கு பெரிய வரப்பிரசாதம் தான்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget