தொகுப்பாளினி பெப்ஸி உமா சிறப்பு பேட்டி


ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஒரு சேனலில் ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெருமை உமாவையே சாரும். வியாழக்கிழமை இரவில் ‘பெப்ஸி உங்கள் சாய்ஸ்' எனப்படும் பிடித்த பாடலை தொலைபேசியில் கேட்டு ஒளிபரப்பும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உமாவிற்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள் இருக்கின்றனர் குஷ்புவுக்குத்தான் கோவில் கட்ட வேண்டுமா? உமாவிற்கும் கோவில் கட்டுவோம் என்று பொங்கிய!
ரசிகர்களும் இருக்கின்றனர். பரபரப்பாக மீடியா உலகில் இருந்தவர் சில ஆண்டுகளாக மீடியாவில் இருந்து விலகியிருந்தார். சன், கலைஞர் டிவிக்குப் பிறகு இப்போது ஜெயா டிவியில் ஆல்பம் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தொகுப்பாளராக வலம் வருகிறார். ஏன் இந்த இடைவெளி? என்று அவரிடம் கேட்டோம். எல்லாம் காலத்தின் கட்டாயம் என்று கூறிவிட்டு தன்னுடைய சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

ப்ளஸ் டூ படிக்கும் போது தூர்தர்சனில் முதன் முதலாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அதற்கு வரவேற்பு அதிகரிக்கவே சன் டிவியில் இருந்து அழைப்பு வந்தது. உங்கள் சாய்ஸ் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுத்து வழங்கினேன்.

உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சிக்கு அப்படி ஒரு ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அன்பால் திரண்ட கூட்டம் அது. முதன் முதலாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு கட் அவுட் வைத்தார்கள் என்றார் அது எனக்காகத்தான் இருக்கும்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் போது பாரதிராஜா, கமல், ரஜினி, மணிரத்னம் ஆகியோர் மூலம் சினிமாவில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் நான் ஒரு சோம்பேறி சினிமாவில் நடிக்கும் அளவிற்கு எனக்கு பொறுமை கிடையாது. அதனால் மறுத்துவிட்டேன்.

புகழோடு இருந்தபோது என்னைச் சுற்றி வந்த கூட்டம் நான் மீடியாத்துறையை விட்டு விலகிய உடன் என்னை விட்டு ஓடிப்போனது. இப்போது நான் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு வந்த உடன் என்னைத் தேடி வந்து ஓட்டுகிறது. நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு புன்னகையோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அரசியல் ரீதியான தொந்தரவு, அழுத்தம் காரணமாகவே மீடியாவை உலகை விட்டு விலக நேரிட்டது. எலிக்காய்ச்சல், சிக்குன் குனியா இரண்டும் சேர்ந்து 6 மாதம் படுத்த படுக்கையாக மாற்றியது. அதிலிருந்து இப்போது மீண்டு வந்திருக்கிறேன்.

ஜெயா டிவியில் ஆல்பம் நிகழ்ச்சியில் சிவகுமார் தொடங்கி பிரபு, பத்மா சுப்ரமணியம் வரை நிறைய பேரை பேட்டி எடுத்திருக்கிறேன். பத்திரிக்கையாளர் சோ மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் ஆல்பத்தை புரட்டி பார்க்க வேண்டும் என்று நம்பிக்கையோடு முடித்தார் உமா

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget