புல்லுக்கட்டு முத்தம்மா சினிமா விமர்சனம்


நெஞ்சை உலுக்கிய காதல் காவியங்களைப் பார்த்துப் பழகிப் போன தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு நெகிழ வைக்கும் 'காமக் காவி்யத்தை' கொண்டு வந்து தருகிறார் இயக்குநர் முத்துப்பாண்டி... தனது புல்லுக்கட்டு முத்தம்மா படம் மூலமாக!. புல்லுக்கட்டை ஆடு மேய்வது போல இந்தப் படத்தில் 'கீரோயினை' வில்லன் மேய்ந்திருக்கிறாராம். அதாவது 'கீரோயின்' வாழ்க்கையில் புகுந்து விளையாடி விடுகிறாராம் வில்லன். 


அதன் பிறகு இன்னா நடக்குது ... என்பது மீதக் கதையாம். புஷ்டியான புல்லுக்கட்டாக.. அதாவது 'கீரோயினாக' வருபவர் பெயர் மினு குரியன். பெயருக்கேற்ப கவர்ச்சியிலும் மினுமினுக்கிறார். கேரளத்து பெரிய வயசு சேச்சியாவார்... இப்படத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரை மறுத்து விட்டு, கவர்ச்சியும், காமமும் நிரம்பி வழியும் 'கீரோயின்' கேரக்டரை கேட்டு வாங்கி விரும்பி நடித்துள்ளாராம்.படத்தோட இயக்குநர் முத்துப்பாண்டியிடம், கதை என்னங்கண்ணா என்று கேட்டபோது, பிறர் பொருளை அபகரிப்பவன் தன் பொருளை இழப்பான் என்பதுதான் சார் படத்தோட ஒன் லைன் என்றார். கொஞ்சம் நீட்டிச் சொல்லுங்க என்று கேட்டபோது அவர் சொன்னது என்னன்னா....'கீரோ' ஒரு பெண் பித்தன். பல பெண்களோட வாழ்க்கைல விளையாடுறான். கடைசியில் கல்யாணம் செய்றான். ஆனால் அவனோட மனைவி வாழ்க்கைல இன்னொருத்தன் புகுந்துடறான். அதாவது 'கீரோ'வின் மனைவியோட வாழ்க்கைங்கற புல்லுக்கட்டை மேஞ்சுடறான்... அப்படின்னு சொல்லி நிறுத்தினார்.படத்தோட 'கீரோயின்' அதாவது முத்தம்மா கேரக்டரில் நடித்திருப்பவர் மினு குரியன். அதாவது கேரளத்து புல்லுக்கட்டு. சும்மா சொல்லக் கூடாது, ரொம்பவே புஷ்டியான புல்லுக்கட்டாக இருக்கிறார். இவர் 'கீரோயின்' ஆன கதை ரொம்ப விசேஷமானது...
படத்தில் நடிப்பது தொடர்பாக டிஸ்கஸ் செய்வதற்காக மினுவைக் கூப்பிட்டாராம் முத்துப்பாண்டி. அவரும் வந்தார். நீண்ட நேரம் டிஸ்கஷன் நடந்துள்ளது. உங்களுக்கு கெளரவமான டாக்டர் கேரக்டர் வச்சுருக்கேன் என்றாராம் பாண்டி. அதைக் கேட்ட அவர் படத்தின் கதையையும் சொல்லச் சொன்னாராம். பாண்டியும் விளக்கினாராம். பாண்டி கதை சொல்லச் சொல்ல...'உம்' கொட்டிக் கேட்டு வந்த மினு, நான் டாக்டரா நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாராம்.அதிர்ச்சியான பாண்டி... ஏன் என்று கேட்க, அது வேண்டாம், ஹீரோயின் முத்தம்மாவா நடிக்கிறேன், ப்ளீஸ் என்று சொல்லவே பாண்டிக்கு போன உசுரு திரும்பி வந்துச்சாம்.அதுகுறித்து பாண்டி கூறுகையில், முத்தம்மா கேரக்டரோட சிறப்பை உணர்ந்து, உள்வாங்கி அதுதான் வேண்டும் என்று என்னிடம் பிடிவாதமாக கேட்டு வாங்கிக் கொண்டார் மினு என்றார். நடிப்பு மேல அவ்வளவு ஈடுபாடு...!


ஷகீலா ரேஞ்சுக்கு பிரமாண்டமாக இருக்கிறார் மினு. இவரது நடிப்பு 'மெனு'வில் கவர்ச்சிக்குத்தான் முக்கியத்துவம் நிறைய இருக்கிறதாம். மலையாளப் படங்களில் கவர்ச்சியில் கலக்கி வரும் இவருக்கு தமிழில் முத்தம்மாதான் முதல் போணியாம்.

இந்த செய்தியில் ஏன் கீரோ, கீரோயின் அப்படின்னு எழுதியிருக்கிறீங்கன்னு உங்களோட மனசாட்சி கேட்கலாம்.. அட, முத்துப்பாண்டி அப்படித்தாங்க உச்சரிக்கிறாரு..அதைத்தான் அப்படியே போட்டோம்.படத்தைப் பார்க்க வருவோருக்கு உணர்ச்சிகள் தூண்டப்படும், உள்ளம் துள்ளப்படும் என்பதை உத்தரவாதமாகவே சொல்கிறார் முத்துப்பாண்டி... ஸ்டில்லைப் பார்த்தாலே 'ஜில்'லுதே...இருக்காதே பின்னே!!!
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget