மைக்ரோசாப்ட் வேர்ட் புதிய யுக்திகள்


எத்தனை சொற்கள் என்று அறிய: வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் எத்தனை சொற்களை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து அவ்வப்போது இதனை செக் செய்திட வேண்டுமா? நீங்கள் ஆபீஸ் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், இதற்கு View | Toolbars என்று சென்று அதில் Word Count என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பாரை அப்படியே மவுஸால் அழுத்திப்
பிடித்து ஏற்கனவே இருக்கும் டூல்பாரின் வலது பக்கத்திற்குக் கொண்டு சென்று உங்கள் திரையின் மேலாக விட்டுவிடவும். வேர்ட் கவுண்ட் டூல் பார் அங்கேயே இருக்கும். எத்தனை சொற்களை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று காட்டும் விண்டோவினையும் நீங்கள் உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம். இதற்கு Tools | Customize | Toolbars என்று சென்று கிடைக்கும் விண்டோவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் இருக்கும்போது அளவை மாற்றும் பணியை மேற்கொள்ளலாம். இனி எப்போது சொற்களின் எண்ணிக்கை தெரிய வேண்டும் என்றாலும் டூல்பாரில் உள்ள கீஞுஞிணிதணt பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆபீஸ் 2007 பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி இன்னும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட டெக்ஸ்ட் பகுதியில் எத்தனை சொற்கள் உள்ளன என்று தெரிய வேண்டும் விரும்பினால், டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கபட்டவுடனேயே, ஸ்டேட்டஸ் பாரில், டாகுமெண்ட்டில் உள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கையும், தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டில் உள்ள சொற்களின் எண்ணிக்கையும் காட்டப்படும். டாகுமெண்ட் உருவாக்கப்படுகையிலேயே, பக்கங்கள் எத்தனை என்றும், சொற்கள் எத்தனை என்றும் காட்டப்படும்.

தானாக கோடு அமைவதை தடுக்க: வேர்டில் டேஷ் கோடு மூன்றை டைப் செய்தால் வேர்ட் உடனே அதனை பெரிய திக்கான கோடாக மாற்றி விடும். இதனை நீக்கும் வழியும் உடனே கிடைக்காது. இந்த செயல்பாடு வேர்ட் புரோகிராமில் பதியப்படும்போதே அமைக்கப்பட்டு விடுகிறது. இதனை நீக்க  Format | Borders and Shading என்று செல்லவும். பின் Borders டேப்பில் கிளிக் செய்து None என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். 

பைல்களை கண்டு திறக்க: பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் திறந்து வேலை பார்க்கையில் அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு டேப் டாஸ்க் பாரில் ஏற்படுத்தப்படும். அதில் சம்பந்தப்பட்ட அப்ளிகேஷனுக்குரிய ஐகானும் பைலின் பெயரும் இருக்கும். அதனைப் பார்த்து நாம் எந்த பைல் வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து திறக்கலாம். ஆனால் ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறக்கையில் அவை குரூப்பாகக் காட்டப்படும். பைலின் பெயர் தெரியாது. ஒவ்வொரு முறையும் இந்த குரூப் ஐகானில் கிளிக் செய்து மேலே எழும் பட்டியலில் பைலின் பெயரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம். 

இதற்கு ஒரு வழியாக ஆல்ட் + டேப் கீகளை அழுத்தலாம். வேர்ட் ஐகான்களோடு பைலின் பெயர் திரை நடுவில் தெரியும். அதனைக் கொண்டும் டாகுமெண்ட்டுகளுக்கிடையே ஊர்வலம் போகலாம். இவை எல்லாம் திறந்திருக்கும் பைல்களை உடனே காட்டாது. ஐகான்கள் அல்லது டாஸ்க்பாரின் கட்டங்கள் சென்று கிளிக் செய்திட வேண்டும். அதற்குப் பதிலாக கண்ட்ரோல் + எப்6 அழுத்தினால் ஒவ்வொரு டாகுமெண்ட்டாக நாம் திறந்து பணியாற்றிய நிலையில் உடனுடக்குடன் தோன்றும். 

மெனுவிலிருந்து வெளியே வர: வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன. 

1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும். 
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget