
இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய, சிம்ரன், தேவயானி போன்ற நடிகைகளே தோற்றுவிட்ட நிலையில், மீண்டும் முதல் ரவுண்டை போலவே, தற்போது பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தமிழில் "வலை, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் அவர், தற்போது வித்யா பாலன் நடித்த, "கஹானி படத்தின், தமிழ், தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து வருகிறார்.ஹரி இயக்கும், "அருவா படத்திலும்,
நயன்தாரா தான், ஹீரோயினாம். "ஐயா படத்துக்காக, கேரளாவில்இருந்து, நயன்தாராவை தமிழுக்கு அழைத்து வந்ததே, ஹரி தான். அதனால், அவரே, தன்னை மீண்டும் அழைத்திருப்பதால், புதிய உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா.