பாலின் மருத்துவ குணங்கள்


உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட.  வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் புரோட்டீன் மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்று. மேலும் சிலருக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்படும். அத்தகைய வலிகள் வருவதற்கு காரணம் கால்சியம் குறைபாடு. ஆகவே எலும்புகள் நன்கு வலுவோடு
இருப்பதற்கு, கால்சியம் அதிகம் நிறைந்த பாலை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன. மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ளலாம். 

6%,3%,1.5% கொழுப்பு உள்ள பால் கிடைப்பதால் நமக்குத் தேவையான கொழுப்பு அளவின்படி நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலில் தண்ணீர் சேர்க்க கூடாது. பாலில் 70% தண்ணீர் இருப்பதால் பாலில் தண்ணீர் கண்டிப்பாக சேர்க்க வேண்டாம். 

கொழுப்பு குறைக்க வேண்டும் என்றால், கொழுப்பு குறைவாக உள்ள பாலை பயன்படுத்தவேண்டுமே தவிர தண்ணீர் ஊற்றிக் காய்ச்சக் கூடாது. இச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான சுண்ணாம்பு சத்து பாலில் அதிகளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சி குழந்தை மற்றும் இளம் பருவத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பால் மிகமிக முக்கியமானது. இவை தவிர இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பால் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget