கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்தைக் குறைப்பது எப்படி


தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கையான இந்தப் பூரிப்பும் பொலிவும் ஒரு பக்கமிருக்க, கர்ப்பத்தினால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், பெண்களின் புறத்தோற்றத்தில் சில மாறுதல்களைக் காட்டத் தவறுவதில்லை. கர்ப்பிணி பெண்கள் உட்கார்ந்திருக்கும்போது கால்களை
ஒரு சிறிய முக்காலியின் மீது வைத்து உட்காருங்கள். படுத்திருக்கும்போது ஒரு தலையணையைத் தொடைகளுக்குக் கீழேயும், மற்றொரு தலையணையை முழங்கால் மற்றும் குதிகாலுக்குக் கீழேயும் வைத்துக் கொள்ளுங்கள். நேராக நிற்கும்போது இடம் மற்றும் வலது கால் பெருவிரலால் தரையில் மாற்றி மாற்றி வட்டங்களை இடுங்கள். 

நடைப்பயிற்சியும் மிதமான உடற்பயிற்சியும் கூடுதல் திரவங்களைச் சுழலச் செய்யும். குறைந்த குதிகால் உயரமுடைய தாராளமான செருப்புகளை உபயோகப்படுத்துங்கள். உங்கள் கைகள் அதிகமாக வீங்கினால், ஒவ்வொரு தோளுக்குக் கீழே ஒரு தலையணையையும், மணிக்கட்டுக்குக் கீழே ஒரு தலையணையையும் வைத்துப் படுங்கள். 

உப்பு சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ‘சிப்ஸ்’ போன்ற உப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகளைத் தவிருங்கள். சாதாரணமாக, இலேசான வீக்கம் சகஜமென்பதால் சிறுநீர் அதிகமாகப் போக வைக்கக்கூடிய மருந்துகளைச் சாப்பிடாதீர்கள். வீக்கம் அதிகமாக இருந்தால், உங்கள் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget