பேரு மட்டும்தான் பவித்ரா ஆனா?


ஸ்ரேயா நடிப்பில் தெலுங்கில் பவித்ரா என்ற பெயரில் வெளியான படம், தமிழில் பேரு மட்டும்தான் பவித்ரா பெயரில் ரிலீசாகிறது. பரத் சினி மீடியா தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா தவிர, சாய்குமார், நிழல்கள் ரவி, ரோஜா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, எம்.வி.சுரேஷ்குமார். இசை, எம்.எம்.ஸ்ரீலேகா. வசனம், வித்யாசாகர். கதை, திரைக்கதை எழுதி ஜனார்த்தன மகரிஷி இயக்குகிறார். குடும்ப சூழலுக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார் ஓர் இளம்பெண்.
தன்னை நாடி வரும் அரசியல்வாதிகள் மற்றும் போலி சாமியார்களின் வேஷங்களையும் தேசத்தை விற்கும் அவர்களின் செயலையும் எப்படி எதிர்த்து போராடுகிறாள் என்பது கதை. படத்தில் ஸ்ரேயா பாலியல் தொழில் செய்யும் வேடத்தில் நடித்துள்ளார். அதேசமயம் கவர்ச்சி எல்லையை மீறாமல் நடித்துள்ளாராம் ஸ்ரேயா.

பழைய பதிவுகளை தேட