சொந்தமாக படமெடுக்கும் சினேகா

சினேகாவுக்கு இருக்கிற அனுபவத்துக்கு அவரெல்லாம் சொந்தமாக படமே இயக்கலாம். ஆனால் அவர் அப்படியெல்லாம் விபரீத விளையாட்டில் இறங்கவில்லை. மாறாக, ஒரு படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்கு காரணம், சமீபகாலமாக சின்ன பட்ஜெட் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதுதான். அதனால் இத்தனை வருடம் சினிமாவில் இருந்ததற்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்று கருதும் சினேகா, சமீபத்திய ரசனைக்கேற்ற கதைகளை
தேடிக்கொண்டிருக்கிறார்.

தான் எதிர்பார்த்து போன்ற கதை கிடைத்ததும் அதற்கேற்ற நடிகர்- நடிகையை தேடுவாராம். ஒருவேளை அந்த கதை தனக்கு பொருத்தமானதாக இருந்தால் தானே கதாநாயகியாகவும் நடிப்பாராம் சினேகா. தற்போது பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக உன் சமையல் அறையில் என்ற படத்தில் நடித்து வரும் சினேகா, சிறிய பட்ஜெட்டில் தரமான படத்தை எப்படி எடுப்பது என்கிற ரகசியத்தை பிரகாஷ்ராஜிடமிருந்துதான் கற்றுக்கொண்டாராம்.

இந்த விஷயத்தைக்கேள்விப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தும், இப்போது சொந்த படமெடுக்கும் யோசனையில் இருக்கிறார். ஆனால் அப்படி அவர் எடுககும் படத்தில் அவர்தான் கதாநாயகனாம். சரிந்து கிடக்கும் தனது மார்க்கெட் தூக்கி நிறுத்தவே இப்படியொரு முயற்சியில் இறங்குகிறாராம் ஸ்ரீகாந்த்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget