விண்டோஸ் இயங்கு தளங்களில் கட், காப்பி, பேஸ்ட் வழி முறையில் கோப்புகளை இடம் மாற்றுவதை விட வேகமாகவும் பல கூடுதல் பயன்களுடனும் சிறிய யுட்டிலிட்டி மென்பொருள்கள் கிடைக்கின்றன. சாதாரண காப்பி பேஸ்ட் செய்வது போலல்லாமல் இவற்றில் இடையில் நிறுத்தி வைத்தும், காப்பியாகும் போது ஏற்கனவே அதே கோப்பு இருந்தால் அதனை ஓவர் ரைட் அல்லது ஸ்கிப் கமாண்ட்கள் கொடுத்தும் தொடர்ந்து காப்பி செய்ய முடியும். சில கோப்புகள் காப்பியாகவில்லை யென்றால் அவை
எவை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும். இச்சிறப்பான வசதிகளுடன் அமைந்த எண்ணற்ற மென்பொருள்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சிறந்த மென்பொருள்கள் சில இலவசமாக கிடைக்கிறது. அவைகளுள் அல்ட்ரா காப்பியர் மென்பொருள் சிறந்த முறையில் உதவும் மென்பொருளாகும்.
இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:5.41MB |