விஜய் படம் - புதிய பிரச்சனை


விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் கேமராமேன் மாற்றப்பட்டுள்ளார். இந்தி பிஸ்டலால் ஏற்பட்ட இந்தப் பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் முருகதாஸ் இந்தியில் ரீமேக் செய்கிறார். அக்ஷய் குமார் ஹீரோ. இந்தப் படத்தின் கேமராமேனாக நியமிக்கப்பட்டவர் நட்டு என்கிற நட்ராஜ். இந்தியில் முன்னணி கேமராமேனாக இருக்கும் இவர் தமிழில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் மெயின் தொழில் ஒளிப்பதிவு. 

விஜய்யின் ஜில்லா படத்துக்கும் நட்ராஜையே ஒப்பந்தம் செய்திருந்தனர். பிஸ்டல் படத்தை தொடங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் ஜில்லாவில் நட்ராஜால் பணிபுரிய முடியாத நிலை. சூழலை புரிந்து கொண்ட ஜில்லா டீம் அவருக்குப் பதில் ஆர்.கணேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறது.

படம் தொடங்கிய உடனே இந்த மாற்றம் நடந்ததால் இரு தரப்புக்கும் இடையில் பிரச்சனை எதுவும் ஆகவில்லை என்பது ஆறுதல்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்