
அப்படி விழுந்ததில் குவிந்து கிடந்த செங்கல்லில் விழுந்த ஆருஷியின் கை மற்றும் கால் முட்டியில் அடிபட்டு ரத்தம் கசிந்ததாம். இதனால் வலியால் துடித்திருக்கிறார் ஆருஷி.
இருப்பினும் அன்றைய தினம் மகேசுடன் இணைந்து ஒரு காதல் காட்சியில் நடித்திருக்கிறார் ஆருஷி. அதில் இருவரும் உதட்டு முத்தம் கொடுத்துக்கொள்ளும் கிளுகிளுப்பான காட்சியாம். இனிப்பான காட்சி என்பதால், அதுவரை வலியால் துடித்துக்கொண்டிருந்தவர், அக்காட்சியில் நடித்தபோது வலி மறந்து போனாராம். சுமார் 2 மணி நேரம் நடந்த அந்த முத்தக்காட்சிக்குப்பிறகு ஆருஷியின் காலில் அடிபட்ட இடமே காய்ந்து விட்டதாம், வலியும் காணாமல் போய் விட்டதாம். அதனால், முத்தக்காட்சி என் வலிக்கு ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது என்று ஆருஷி வெட்கத்துடன் சொல்ல, யூனிட்டே கலகலப்பாகி விட்டதாம்.