மகளிரை தாக்கும் புற்றுநோய் வகைகள்

புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. தலை முதல் கால் வரை எந்தப் பாகத்தையும் புற்றுநோய் தாக்கலாம். இருப்பினும், தலை மற்றும் கழுத்துப் பகுதியிலும் உணவுக் குழாயிலும் வரும் புற்றுநோய் ஆண், பெண் இரு பாலரையும், கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் பெண்களையும் அதிகமாகத் தாக்குகிறது.

நாள்பட்ட ஆறாத புண், மார்பகம் அல்லது வேறு உறுப்புகளில் வலியுள்ள அல்லது வலியற்ற கட்டி, நாள்பட்ட இருமல் அல்லது குரல் மாற்றம், உணவு உண்ணுவதில் தடை, உடலில் எந்தப் பகுதியிலாவது நீர் அல்லது ரத்தக் கசிவு, சிறுநீர் அல்லது மலம் கழித்தல் போன்ற வழக்கங்களில் மாற்றம் ஆகியவை புற்று நோயின் அபாய அறிகுறிகளாகும். 

சில வகை புற்றுநோய்கள் பரம்பரையாகவும் வருவதுண்டு. பெற்றோரில் ஒருவருக்கோ இருவருக்குமோ இருந்தால், குழந்தைகளுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். இந்திய பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. 

போதிய விழிப்புணர்வு இல்லாதது, இளம் வயதிலேயே திருமணம் செய்து பல முறை கருத்தப்பது, கருத்தடை மாத்திரைகளை அதிக அளவில் உபயோகித்தல், பல ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளுதல், பிறப்பு உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது ஆகிய காரணங்களால் இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு இருப்பது, மாதவிலக்குக்கு இடையில் ரத்தப்போக்கு இருப்பது, மாதவிலக்கு முழுவதும் நின்றபின் வெள்ளைப்படுதல் அல்லது ரத்தப்போக்கு இருப்பது, உடலுறவின்போதோ அல்லது பின்போ ரத்தக்கசிவு இருப்பது ஆகியவை இதற்கான அறிகுறிகள். 

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க எளிய, வலியில்லாத பரிசோதனை முறை பேப் சிமியர் சோதனை ஆகும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முதன்மை சிகிச்சையாக கதிரியக்கச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget