பெண்களுக்கு ஏற்படும் சினைப்பைக் கட்டி பிரச்சனையை தடுப்பது எப்படி?

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள். இந்த பிரச்சனை பொதுவாக 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குத் தான் ஏற்படும். ஆனால் தற்போது 20 வயதுள்ள பெண்களுக்கே, இந்த பிரச்சனை வருகிறது. இதற்கு பெரும் காரணம் ஹார்மோன் மாற்றங்களே. 
அதுமட்டுமல்லாமல், ஆரோக்கியமற்ற டயட், போதிய உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கெட்ட பழக்கங்கள் போன்றவை ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை விளைவிக்கின்றன. இத்தகைய சினைப்பைக் கட்டிகள் பெண்களுக்கு வந்தால், அதனை உடனே தெரிந்து கொள்ள முடியாது. 

ஆனால் ஒருசில அறிகுறிகளை வைத்து உறுதி செய்து கொண்டு, மருத்துவரை அணுகலாம். அதில் சில அறிகுறிகளான முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் எடை அதிகரித்தல், கருத்தரிப்பதில் பிரச்சனை போன்றவை. பி.சி.ஓ.எஸ் குணப்படுத்துவதற்கு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான சில உணவுகளை சாப்பிட வேண்டும். 

குறிப்பாக வைட்டமின் டி, ஒமேகா-3 ஃபோட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளது. இவை இதயத்திற்கு மட்டுமின்றி, பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரித்து, பிரச்சனையை போக்குகிறது. 

லெட்யூஸ் காய்கறியில், இன்சுலின் எதிர்ப்பொருள் உள்ளது. பொதுவாக பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்கள் அதிகமான இன்சுலின் சுரப்பினால் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் இந்த காய்கறியை சாப்பிடுவது நல்லது. பார்லியில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கொழுப்புக்கள் உள்ளது. 

ஆகவே பெண்கள் இதை சாப்பிட்டால், இதில் உள்ள குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ், அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும். ப்ராக்கோலியில், அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் குறைந்த அளவு கலோரி, கிளைசீமிக் இன்டெக்ஸ் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருளும் உள்ளதால், பெண்கள் நிச்சயம் இதனை சாப்பிட வேண்டும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget