கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

4. எதிர்நீச்சல்

ஆறு வாரங்கள் முடிவில் சிவ கார்த்திகேயனின் காமெடிப் படம் 6.24 கோடிகளை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் சென்னை வசூல் 2.6 லட்சங்கள். வார நாட்களில் 2.08 லட்சங்கள்.

3. நேரம்

முக்கி முனகிதான் ஓடுகிறது நேரம்.
சென்ற வார இறுதியில் 3.5 லட்சங்களையும், வார நாட்களில் 2.7 லட்சங்களையும் வசூலித்து மூன்றாவது இடம் பிடித்திருக்கும் இப்படம் இதுவரை சென்னையில் 92.8 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

2. சூது கவ்வும்

வார இறுதியில் 11.2 லட்சங்களையும், வார நாட்களில் 11.15 லட்சங்களையும் வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆறு வாரங்களில் இதன் சென்னை வசூல் 7.74 கோடிகள்.

1. குட்டிப்புலி

சென்ற வாரம் பெரிய படங்கள் வெளியாகாததால் குட்டிப்புலி அதே முதலிடத்தில் உள்ளது. வார இறுதியில் 1.06 கோடியும், வார நாட்களில் 1.16 கோடியும் வசூலித்து முன்னணி நடிகர்களையே அதிர வைத்துள்ளது. இதுவரை 3.72 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்