பெண்கள் கருத்தரித்தலை தடுக்கும் உடல் பருமன்

கருத்தரித்தல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கும் பெண்களைக் கவனித்துப் பாருங்கள்... அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிக பருமன் கொண்டவர்களாக இருப்பது தெரியும். யெஸ்... குண்டான பெண்களுக்குக் கருத்தரிப்பில் சிக்கல் ஏற்படுவதுடன், அப்படியே கருத்தரித்தாலும், பல பிரச்னைகள் வரிசை கட்டித் தொடரும் என்றும் எச்சரிக்கிறார் மகப்பேறு மருத்துவர்கள்.. மாறிப்போன வாழ்க்கை முறை, பெருகி வரும் நீரிழிவு, தவறான
உணவுப்பழக்கம் என பல காரணங்களால் இன்று நிறைய பெண்கள் அதிகப் பருமனாகக் காணப்படுகிறார்கள். 

அப்படிப்பட்டவர்கள், திருமணத்துக்குப் பிறகு மற்ற பெண்களைப் போல அத்தனை சுலபத்தில் கர்ப்பம் தரிப்பதில்லை. அப்படியே கருத்தரித்தாலும், அடிக்கடி கருக்கலைவது, கர்ப்ப காலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கால்களில் ரத்தம் கட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். 

குண்டான கர்ப்பிணிகளுக்குப் பிரசவ வலியும் சீக்கிரம் வராது. பெரும்பாலும் அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்யும்போது மயக்க மருந்து கொடுப்பதிலும் சிக்கல் இருக்கும். சிசேரியன் செய்து, குழந்தையை வெளியே எடுத்தாலும், அறுவை சிகிச்சை செய்த புண், அத்தனை சுலபத்தில் ஆறாது. 

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதிலும் அவஸ்தை இருக்கும். தவிர குண்டாக இருப்பதாலேயே அந்தப் பெண்கள் ஆரோக்கியமானவர்கள் என அர்த்தமில்லை. அவர்களுக்கும் வைட்டமின் டி மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடுகளும் ரத்த சோகையும் தாக்கலாம். 

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மையும் சேர்ந்து கொள்ளும். ஏற்கனவே குண்டாக இருப்பதுடன், வயிறும் பெரிதாகி அழுத்த, மூச்சுத் திணறலும் பயமுறுத்தும். கால்களில் வீக்கமும் வலியும் அதிகமாகும். பருமனான பெண்களுக்கு ஸ்கேன் செய்வதும் சற்று சிரமம். 

ஸ்கேனில் குழந்தையின் வளர்ச்சியைத் துல்லியமாகப் பார்ப்பதிலும் சிக்கல் வரலாம். இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, குண்டுப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பெரிய, பருமனான குழந்தைகளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்பகாலம் முடியும் முன்பே குழந்தை பிறக்கவும், அது வளர்ச்சியில்லாமல் பிறக்கவும் சந்தர்ப்பங்கள் அதிகம். 

குழந்தை வளரும்போதும், அது பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்னைகளால் பாதிக்கப்படக்கூடும். பருமனாக இருப்பதை உணரும் பெண்கள், கர்ப்பத்துக்குத் திட்டமிடும் முன், உடல் எடையைக் குறைக்க வேண்டும்.. 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget