கெடுதல் விளைவிக்கும் நிரல்களை தடுக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களைத் தடுப்பதில், பிரவுசர்களுக்கிடையே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடம் குரோம் பிரவுசருக்கு உள்ளது. என்.எஸ்.எஸ். லேப்ஸ் (NSS Labs) என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது. 

700 வகையான மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு
இந்த சோதனை நடத்தப்பட்டது. 28 நாட்களாக, குரோம், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இவற்றில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 99 சதவீத மால்வேர்களைத் தடுத்தது கண்டறியப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த குரோம் பிரவுசர், 83 சதவீத மால்வேர் புரோகிராம்களையே தடுக்க முடிந்தது. சபாரி மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்கள் 10 சதவீத மால்வேர்களையே தடுக்க முடிந்தது. ஆப்பரா பிரவுசரின் அண்மைப் பதிப்பு 2 சதவீத மால்வேர்களையே தடுத்தது. 
மற்றவற்றைக் காட்டிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் குரோம் பிரவுசர்கள் மட்டும் ஏன் அதிக அளவில் மால்வேர் புரோகிராம்களைத் தடுக்க முடிந்தது? மால்வேர் புரோகிராம்களைத் தடுப்பதில், இவை கேம்ப் (CAMP (content agnostic malware protection) என்னும் தொழில் நுட்பத்தினைக் கையாள்கின்றன. இந்த தொழில் நுட்பத்தின் மூலம், தரவிறக்கம் செய்யப்படும் மூல தளத்தின் நம்பகத்தன்மை முதலில் சோதனை செய்யப்படுகிறது. தரவிறக்கம் செய்யப்பட்ட பின்னர், இன்ஸ்டால் செய்திடும் முன், குறிப்பிட்ட பைல் அல்லது புரோகிராம் சோதனைக்கு உள்ளாகிறது. மால்வேர் இருப்பதாகச் சோதனையில் தெரிய வந்தால், உடனே எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்துவது தடுக்கப்படுகிறது. 

கூகுளைப் பொறுத்தவரை, குரோம் பிரவுசரில், Safe Browsing API v2 என்ற தொழில் நுட்பமும் கூடுதலாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆப்பரா பிரவுசர், ரஷ்யாவின் இன்டர்நெட் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, மால்வேர் தடுப்பு புரோகிராமினைத் தன்னுடன் இணைத்துள்ளது. ஆனால், இது செயல்படவில்லை என என்.எஸ்.எஸ். லேப்ஸ் அறிவித்துள்ளது. 

பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசரின் தடுப்பு வேகம், குரோம் பிரவுசருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருந்தாலும், இதனை சரிப்படுத்த, இந்த பிரவுசர் புரோகிராம்களின் சில குறியீடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, இவற்றின் நிறுவனங்கள் சரி செய்துவிடும் எனவும் என்.எஸ்.எஸ்.லேப்ஸ் தெரிவித்துள்ளது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget