பரிகாரம் செய்தால் பலன் கிடைக்குமா?

நம் இந்து தர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் கால மாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களாகும். இந்த வேண்டுதல்கள், வழிபாடுகள் எல்லாம் ஆன்மிகமும் ஜோதிடமும் இணைந்த ஓர் அற்புத கலவையாகும். அமாவாசை என்றால் பூஜை, வழிபாடு கள், திருஷ்டி கழிப்பது, பௌர்ணமியன்று கிரிவலம், சந்திர தரிசனம், அம்பாள்
வழிபாடு, அன்னதானம் போன்றவை, ராகுகால வழிபாடு, அஷ்டமி,  நவமி வழிபாடு, சுமங்கலி பூஜை, கிரகசாந்தி ஹோமங்கள், யாகங்கள், பரிகார பூஜைகள் ஆகியவற்றை இன்றளவும் நாம் ஆழ்ந்த பக்தியுடனும் மிகு ந்த நம்பிக்கையுடனும் செய்து வருகிறோம்.

பரிகாரம் என்றால் என்ன?

பரிகாரம் என்றால் நமக்குள்ள கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னைகள், தீராத நோய் நொடி, வியாபாரம், தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை, குழந்தை பாக்ய தடை,  வழக்குகள், சொத்து தகராறு, திருமணத்தடை, அடிக்கடி விபத்துக்கள் என்று பல்வேறு விதமான கஷ்ட நஷ்டங்களுக்காக நாம் பிரார்த்தனை, நேர்த் திக்கடன்கள், பரிகார பூஜைகள் செய்து கொள்கிறோம்.

ஒவ்வொரு பிரச்னைக்கும் குறிப்பிட்ட பூஜை வழிபாடுகளும் விரத நோன்புகளும் வழிபாடு செய்ய பரிகார தலங்களும் உள்ளன. இவற்றையெல்லாம்  நாம் சிரத்தையாக பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்து விட்டு வந்தாலும் பலன் கிடைப்பதற்கு காலதாமதம் ஆகும்போது நமக்கு சலிப்பு ஏற்படுகி றது. எல்லா கோயில்களுக்கும் சென்று பார்த்தாகிவிட்டது. சகல பரிகாரங்கள், பூஜைகள், ஹோமங்கள் செய்தாகிவிட்டது. ஆனால், இன்னும் ஒன்றும்  நடக்கக் காணோம் என்று வருத்தப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு இந்த மனக்குறை? ஏன் பரிகாரங்கள் சில குறிப்பிட்ட  காலங்களில் வேலை செய்வதில்லை? சுபகிரக யோக தசை பார்வை பட்டவுடன்தான் பரிகாரங்கள் பலன் தருகின்றன. இதற்கு என்ன காரணம்?  ஜோதிட சாஸ்திரம் இதற்கு என்ன தீர்வு சொல்கிறது?

எல்லாவற்றிற்கும் பிராப்தம் தேவை

பரிகாரங்கள், நேர்த்திக் கடன்கள் போன்றவை  எந்தக் காலத்திலும் வீண்போகாது. பகவானுக்காக செலவழிக்கும் பணமும் நேரமும் நிச்சயம் பலன்  தரும். ஒரு சிலருக்கு உடனே பலன் கிடைக்கிறது. சிலருக்கு சிறிது தாமதமாகிறது. இதற்குக் காரணம் அவர்களின் பூர்வகர்ம வினைப்படி அமைந்த  ஜாதக அம்சம்தான்.
ஒருசமயம் காஞ்சி மகா சுவாமிகள் பூஜையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஒருவர் ஒரு சிறுமியை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு அழுது கொண்டே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்தவுடன் தன் உதவியாளர் மூலம் அவர் ஏன் அழுகிறார் என்று கேட்டு வரச் சொன்னார்.  வந்தவர், தன் பெண் குழந்தைக்கு இதயத்தில் சிறிய ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்  என்றும் கூறினார். 

இதைக்கேட்ட மகா பெரியவர் ஒரு மாம்பழத்தை கொண்டு வரச் சொல்லி அதில் இருந்து ஒரு சிறிய பகுதியை வெட்டி அந்தக் கு ழந்தைக்கு தரச் சொன்னார். அத்துடன் ஆசீர்வாதம் செய்து, பிரசாதமும் கொடுத்தனுப்பினார். சில நாட்கள் சென்றபின் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்கள். அப்போது மருத்துவர்கள் இந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.  இதயத்தில் இருந்த ஓட்டை தானாகவே மூடிக்கொண்டு விட்டது என்று கூறினார்கள். இது காஞ்சி மகா சுவாமிகளின் அருளாசியால் நடந்த அற்புதமா கும். இதைத்தான் நாம் அவரவர்கள் பிராப்தம், வாங்கி வந்த வரம் என்று சொல்கிறோம்.

நேரம் - காலம்

பலவகையான பழ மரங்கள் உள்ளன. இவையெல்லாம் எப்பொழுதும் நமக்கு பழங்களைத் தருவதில்லை. ஒவ்வொரு மரமும் அதற்குண்டான கால,  நேர, பருவம் வரும்போதுதான் பூத்து, காய்த்து, கனி தருகிறது. இதைப்போலத்தான் நமக்கும் காலநேரம் எனும் யோக அம்சம் உண்டாகும்போது தான் நமக்கு நடைபெற வேண்டிய காரியங்கள் தங்குதடையின்றி நடக்கின்றன. இதற்கிடையில் நாம் என்ன முயற்சித்தாலும் எதுவும் கூடி வருவதில் லை. இதையேதான் பகவான் ரமணர், ‘‘நடவாது என்பது என் முயற்சிக்கினும் நடவாது, நடப்பதை என் தடை செய்யினும் நில்லாது’’ என்று அருளினார்.

பரிகார பூஜைகள் செய்யும்போதும் செய்த உடனும் பலருக்கு தடைகள் நீங்கி அவர்கள் விருப்பப்படி எல்லாம் அனுகூலமாக நடைபெறுகின்றன. சில ருக்கு நீண்ட நாட்கள் பூஜைகள், வழிபாடுகள் செய்தாலும் எதுவும் கூடிவராமல் இருப்பதும் உண்டு. இதற்குக் காரணம் பூர்வ ஜென்ம கர்ம வினைப்  பயனால் உண்டான ஜாதக அமைப்பாகும். நமக்கு எந்த ஒரு விஷயமும் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமென்றால் ஜாதகத்தில் தசாபுக்தி  யோகபலம் வேண்டும். என்னதான் ராஜயோக ஜாதகமாக இருந்தாலும் நல்ல நேரம், காலம், யோக தசை வரவில்லை என்றால் எல்லாமே ஸ்தம்பித் துவிடும். இது நாம் செய்யும் பரிகாரங்கள் உட்பட அனைத்திற்கும்தான்.

குறிப்பாக இந்த பூஜை, வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள், பரிகாரங்கள் பலன் தர வேண்டும் என்றால், நாம் பரிகாரம் செய்ய ஆரம்பிக்கின்ற நாள்  நல்ல சுப நாளாக இருக்க வேண்டும். எந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்கிறோமோ அந்த கிரகம் நீசம், வக்ரம் அடையாமல் இருக்க வேண்டும். நம்  ஜாதகப்படி நல்ல தசா புக்திகள் நடைபெற வேண்டும். ஹோமம், யாகம் செய்யும் நாளில் நல்ல லக்னத்தில், நல்ல சுபகிரக பார்வை உள்ள நேரத் தில் ஆரம்பித்து செய்ய வேண்டும்.

ஒன்று - ஐந்து - ஒன்பது

ஜாதகத்தில் 1, 5, 9 என்று ஸ்தானங்கள் உள்ளன. இந்த ஸ்தானங்களை லக்னாதிபதி, பஞ்சமாதிபதி, பாக்யாதிபதி என்பார்கள். இவர்கள் மூவரும் நம்  விருப்பங்களை நிறைவேற்றுபவர்கள். லக்னாதிபதி தசை, புக்தி நடக்கும்போது எல்லாம் கூடிவரும். பஞ்சமாதிபதி தசை நடக்கும்போது குழந்தை வரம்  கிடைக்கும்; பரிகாரங்கள் பலன் தரும். பாக்யாதிபதி தசை, புக்தி நடக்கும்போது நோய் நொடிகள் நீங்கும். சொத்து சுகம் சேரும். ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதி, பன்னிரண்டாம் அதிபதி தசா புக்திகள், நீச்ச கிரக தசா புக்திகளில் செய்யும் காரியங்கள், சுப பரிகாரங்கள் வேலை  செய்யாது. காலம் தாழ்த்தியே பலன் தரும். ஆகையால் சரியான கிரக தசா காலம் வரும்போது நாம் செய்யும், செய்த பரிகார பூஜைகள் நமக்கு  உரிய பலனைத் தரும் என்பதே ஜோதிட சாஸ்திரம் நமக்குச் சொல்லும் தீர்வாகும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget