தெலுங்கு படங்களில் தமன்னா ரூ.1 கோடி சம்பளம் கேட்கிறார் என்று மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கடுப்பாகியுள்ளார். தமன்னா இலியானாவை பின்பற்றி பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். இருந்தாலும் இலியானாவைப் போன்று தன்னை பெரிய நடிகையாக்கிய தெலுங்கு பட உலகை அவர் மறக்கவில்லை. தமன்னா தற்போது 2 தெலுங்கு படங்கள், 2 இந்தி படங்கள் ஆகியவற்றில் நடித்து வருகிறார். தமன்னா இந்தி, தெலுங்கு தவிர தமிழில் அஜீத்
குமாருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அம்மணி பாலிவுட்டுக்கு சென்றபிறகு தெலுங்கு படங்களில் தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்திவிட்டார் என்று தயாரிப்பாளர்கள் முணுமுணுக்கின்றனர்.
ஏற்கனவே நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோர் தெலுங்கில் ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமன்னாவுக்கு ரூ. 1 கோடி கொடுத்து நடிக்க வைப்பதைவிட வேறு நடிகைகளை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆக தமன்னா தனது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்.