மிஸ்டர் விக்ரம் உங்க வேலையைப் பாருங்க - ராணா

தெலுங்கு நடிகர் ராணாவின் இந்திப் பட பிரவேசம் குறித்து கமெண்ட் அடிக்கப் போய் ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். தென்னிந்திய நடிகர்களால் பாலிவுட்டில் தாக்குப் பிடிக்க முடிவதில்லையே.. ஏன்? டெல்லி பத்திரிகை ஒன்றின் இந்தக் கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில்தான் லடாய்க்குக் காரணம். இந்தியில் ராவண், டேவிட் என இரண்டு படங்களில் நடித்தார் விக்ரம். இரண்டும் அவுட். அதனால்தான் இந்தக் கேள்வி.