பவர் ஸ்டாருக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்

சிங்கம் இந்தி ரீமேக்கில் நடித்த காஜல் அகர்வால் அதன் பிறகு அக்சய் ஜோடியாக ஸ்பெஷல் 26 படத்தில் தோன்றினார். ஆனால் அவர் எதிர்பார்த்த பிரேக் இந்தியில் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தென்னகத்துக்கே திரும்பியிருக்கிறார். கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடித்து வருகிறவர் மேலும் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தெலுங்கில் சம்பத் நந்தி இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.