ஸ்கிரீன் ஷாட் எடுக்க புத்தம் புது யுக்தி

திரைக் காட்சிகளை அடிக்கடி படங்களாக மாற்றிப் பதிந்து வைக்கும் தேவைகள் நமக்கு அதிகம். விண்டோஸ் சிஸ்டத்தில் தொடக்கம் முதலே
நமக்கு இதற்கான வழிகள் பல தரப்பட்டன. பலருக்கும் பழக்கமான Print Screen கீ இதில் முதல் இடத்தைப் பிடிக்கிறது. பல ஆண்டுகளாகப் பல விண்டோஸ் இயக்க முறைமை பதிப்புகளுடன் பயன்படுத்தி வருகிறோம். விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இதற்கான பல வழிகள் உள்ளன; அவற்றை ஒரு கட்டுரையில் சில வாரங்களுக்கு முன் தந்திருந்தோம். 

விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் பலர், இந்த செயல்பாட்டுக்கு Snipping Tool என்ற ஓர் அருமையான டூல் இருப்பதனை அறியாமலேயே உள்ளனர். தேவையான பகுதியைத் தனியே படமாக எடுப்பது மட்டுமின்றி, அது குறித்து எழுதி வைக்கும் வசதியும் இந்த டூலில் தரப்பட்டுள்ளது. இது எப்படி செயல்படுகிறது என இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் 10 இயக்க முறைமையில், Snipping Tool தொடங்க, ஸ்டார்ட் மெனு தேடல் கட்டத்தில் 'Snipping Tool' என டைப் செய்து தேடவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இது ஸ்டார்ட் மெனுவிலும், விண்டோஸ் 8ல், ஸ்டார்ட் ஸ்கிரீனிலும் தேடினால் இது கிடைக்கும்.

Snipping Tool தொடக்கம் ஒரு மிகச் சிறிய விண்டோவில் ஆரம்பிக்கும். நான்கு பட்டன்களே கொண்டுள்ள இதுவா நமக்கு ஒரு நல்ல சாதனம் என்று ஏமாற்றம் அடைய வேண்டாம். இந்த பட்டன்கள் மூலம், அதிக திறன் தேவைப்படும் பல பணிகளை முடிக்கலாம். Snipping Tool பயன்படுத்தும் முன், திரைக் காட்சியில், எந்தப் பகுதியை வெட்டி படமாக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும். 

Print Screen கீ போன்றவை, முழுத் திரையையும் நகலெடுத்துத் தரும். ஆனால், Snipping Tool நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் வெட்டி எடுக்க உதவும். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் கால்குலேட்டர் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை எடுக்க நாம் விரும்புகிறோம் என வைத்துக் கொள்வோம். முதலில் கால்குலேட்டரை இயக்குவோம். விண்டோவில் தெரியும் காட்சியை நாம் விரும்பும் வகையில் நீட்டலாகவோ, அகலமாகவோ வைத்துக் கொள்வோம். அடுத்து, Snipping Tool விண்டோவில், New என்ற முதல் பட்டனில் உள்ள கீழ்விரி முனையைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Window Snip என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க விரும்பும் திரைக் காட்சி மீது மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். அந்த திரை முழுவதும் மங்கலான தோற்றத்தில் அமையும். அப்ளிகேஷன் விண்டோ மட்டும் தனித்துத் தெரியும். அதன் கீழாக, மவுஸ் கர்சர் இருக்கும். இதனைக் கொண்டு, தேவையான திரை இடத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். தேர்ந்தெடுக்கும் இடம் சிகப்பு கோடிட்டுக் காட்டப்படும். இது Snipping tool உள்ளாகப் பட்டன்களுக்குக் கீழாகக் காட்டப்படும். நீங்கள் ஒரு விண்டோவுக்கு மேல் ஸ்கிரீன் ஷாட் எடுக்க திட்டமிட்டால், Free-Form அல்லது Rectangular Snip என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முழுத்திரையும் வேண்டும் என்றால், Full-Screen Snip தேர்ந்தெடுக்க வேண்டும். 

நாம் விரும்பும் ஸ்கிரீன் ஷாட் கிடைத்துவிட்டால், அதனை ஒரு GIF, JPEG, அல்லது PNG பைலாக கம்ப்யூட்டரில் சேவ் செய்து கொள்ளலாம். இந்த ஸ்கிரீன் ஷாட் இமேஜை, கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லலாம். மின் அஞ்சல் ஒன்றின் இணைப்பாகக் கொள்ளலாம். இந்த ஸ்கிரீன் ஷாட் மீது, டிஜிட்டல் பேனா அல்லது ஹை லட்டர் அல்லது இதற்கான ஐகானைக் கிளிக் செய்து, எழுதலாம். நீங்கள் தயார் செய்த ஸ்கிரீன் ஷாட் உங்களுக்குத் திருப்தியாக இல்லை என்றால், Snipping Tool கட்டத்தில் New என்பதைக் கிளிக் செய்து, மீண்டும் முதலில் இருந்து தொடங்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget