கைக்கடிகாரம் வாங்கும் போது யோசிக்க வேண்டியவை

ஆண்கள் விரும்பி அணிகின்ற கைக்கெடிகாரங்களில் விதவிதமான மாடல், டிசைன்களில் கைக்கெடிகாரங்கள் வருகின்றன. கைக்கடிகாரம் கையில் நாம்
அவ்வப்போது நேரத்தை பார்க்க உதவி செய்பவை. இந்த கைக்கடிகாரங்கள் அதிக விலை உள்ளது முதல் குறைந்த விலை உள்ளது வரை என பல பிரிவுகளில் உள்ளது.

இதன் தொழில்நுட்ப அம்சங்கள், ஸிட்ராப், இயக்க வசதிகள், வடிவம்
என்பதற்கு ஏற்றவாறு எண்ணற்ற கைக்கடிகாரங்கள் உள்ளன. நாம் ஏதோ கையில் கடிகாரம் கட்டினோம் என்று செல்லாமல் அந்த கடிகாரம் எந்த வகையில் நமக்கு பயனுள்ளதாக என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும். அதுபோல் புதியதாய் கைக்கடிகாரம் வாங்கும் முன் நமக்கு ஏற்ற வகையிலான கைக்கடிகாரங்களை தேர்ந்தெடுத்து வாங்குதல் வேண்டும்.

கைக்கடிகாரங்களில் உள்ள சில பிரிவுகள் :

கைக்கடிகாரங்கள் என்பதில் அதற்கென சில சிறப்பு பிரிவுகளும் உள்லன. அதாவது கிளாசிக், டிசைனர் லேபிள், கேட்ஜெட், லக்ஸரி, ஸ்போர்ட்ஸ் என்றவாறு உள்ளன. கிளாசிக் என்பது பழங்கால பின்னணி கொண்டவையாக உள்ளன. வட்ட வடிவில் கடிகாரத்தின் பழங்கால அமைப்பு மாறாமல் உள்ளன. கேட்ஜெட் என்பது ஸ்மார்ட் வாட்ச்க்களை குறிக்கிறது. லக்ஸரி என்பவை மிக விலையுயர்ந்த கடிகாரங்கள் ஆகும். ஸ்போர்ட்ஸ் வாட்ச்கள் டிஜிட்டல் மற்றும் பலவித இயக்க வசதி கொண்ட வாட்ச்களாகும்.

கைக்கடிகாரங்களின் ஸ்ட்ராப் வகைகள் :

ஸ்ட்ராப் என்பது கடிகாரத்தில் பட்டை பகுதி. இதில் பல வகைகள் உள்ளன. தோல், உலோக பிரேஸ்லெட், பிளாஸ்டிக் (அ) ரப்பர், துணி மற்றும் கஃப் வகைகள். தோல் ஸ்ட்ராப் என்பதில் பல வண்ணம் மற்றும் பல வகைகள் உள்ளனய உண்மையான விலங்கின் தோல் என்றால் அந்த ஸ்ட்ராப் விலை கூடுதலாக இருக்கும்.

உலோக ஸ்ட்ராப்களில் தங்கம், வெள்ளி, செம்பொன் மற்றும் பித்தளை சில்வர் என்றவாறு உலோக மேற்பூச்சும், உலோக தகடுகளும் கொண்ட ஸ்ட்ராப் கிடைக்கின்றன. பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் ஸ்ட்ராப்கள் விலை குறைவானதே. துணி ஸ்ட்ராப்கள் பயன்பாடு மிக மிக குறைவானதே. கஃப் என்பது தோல் ஸ்ட்ராப்தான் அதன் அமைப்பு நமது கைமூட்டு பகுதியில் அமர ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

கைக்கடிகாரத்தின் இயக்க வகைகள் :

நாம் கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் எந்த முறையில் இயங்குகிறது என்பது கூட பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஒரு சிலரின் கைக்காரகங்கள் பரிசளிக்கப்பட்டு வந்தவையாக இருக்கலாம். இல்லையெனில், பார்த்தேன் அழகாக இருந்தது, வாங்கினேன் என்று கூறுவர்.

கைக்கடிகாரத்தில் வோர்ட்ஸ், மெக்கானிக்கல், ஆட்டோமெடிக், சோலார் பவர் போன்றவாறு இயக்க வகைகள் உள்ளன. க்வார்ட்ஸ் என்பது பேட்டரி மூலம் இயங்குபவரை. மெக்கானிக்கல் என்பது அவ்வப்போது கடிகாரத்தின் பட்டனை சுழற்றி சுழற்றி இயக்கச் செய்வது.

ஆட்டோமெடிக் என்பது தானியங்கியாக இயங்கி கொண்டிருப்பது. தற்போது புதிய வடிவாய், சூரியஒளியில் இருந்து சக்தியை பெற்று இயங்கும் கைக்கடிகாரங்கள் வந்துள்ளன.

கைக்கடிகாரம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை :

கைக்கடிகாரத்தின் வடிவங்கள் தங்கள் கைகளுக்கு ஏற்றவாறு உள்ளதா எனவும், அதில் செல்லபடும் சிறப்பு அம்சங்களான ஸ்பாலஷ் ப்ரூப். வாட்டர் புரூப் போன்றவை உள்ளனவா எனவும் ஆராய்ந்திட வேண்டும். நாம் கையில் அணியக்கூடிய கடிகாரத்தை சிறப்புற ஆராய்ந்து வாங்குவதே நல்லது. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget