சீரியலில் மிரட்ட வரும் ஸ்வேதா

ரா ரா மற்றும் சந்தமாமா படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். போதிய வாய்ப்புகள்
இல்லாமல் இருந்த ஸ்வேதா பாசு, கடந்த ஆண்டு ஒரு விவகாரமான விஷயத்தில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு 15 நாள் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டார். பின்னர் மன்னித்து விடுதலை செய்யப்பட்டார். வறுமையின் காரணமாகவே பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாக அப்போது ஸ்வேதா தெரிவித்தார். அவரின் பரிதாப நிலை கண்ட இந்தி இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பளிக்க முன் வந்தனர். அவர்களில் முக்கியமானவர் ஏக்தா கபூர்.

தற்போது அவர் தான் தயாரிக்கும் சந்திர நந்தினி என்ற இந்தி தொடரில் ஸ்வேதா பாசுவை ஹீரோயின் ஆக்கிவிட்டார். சந்திரகுப்த மவுரியரின் வரலாற்று தொடரான தொடரில் சந்திரகுப்த மவுரியரை வீழ்த்திய இளவரசி நந்தினியாக நடிக்கிறார் ஸ்வேதா. இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் டப் செய்யப்பட்டு வருகிற 31ந் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு இந்த தொடரை காணலாம். தமிழ் படங்களில் நடித்த ஸ்வேதா பாசு டப்பிங் சீரியல் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

பழைய பதிவுகளை தேட