டிரைலர் வெளியீட்டில் கண்கலங்கிய நடிகை பூர்ணா

மிஷ்கின் தயாரிப்பில், தங்கமீன்கள் ராம் ஹீரோவாக நடிக்க அவருடன் பூர்ணா, மிஷ்கின் ஆகியோரும் முக்கியமான ரோலில் நடித்துள்ள படம் ‛சவரக்கத்தி'. இதில் மிஷ்கினின் உதவியாளர் ஆதித்யா இயக்கியுள்ளார்.

பூர்ணா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ராம் ஹீரோ கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார், மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார், மூன்று மனிதர்களின் ஓட்டம் தான் படத்தின் கதை. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில்
நடந்தது. அப்போது விழாவில் பங்கேற்று பேசிய நடிகை பூர்ணா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

பூர்ணா பேசியதாவது... கேரளாவில் நான் ஒரு நல்ல டான்சர், முறைப்படி நடனம் கற்றுள்ளேன். தமிழ் படங்களில் நடிக்கும் ஆசையோடு தான் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் வந்த பிறகு தான் தெரிந்தது, என்ன தான் திறமையிருந்தாலும் நல்ல கதை இருந்தால் தான் படம் வெற்றி பெறும், நிறைய வாய்ப்புகள் பெற முடியும் என அறிந்து கொண்டேன். என் முந்தைய படங்கள் சரியாக போககாததற்கு இதுவும் ஒரு காரணம். சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்தபோது சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன், பேசாமல் நடன துறைக்கு போகலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் தெலுங்கில் சில நல்ல கதை வந்தது, அங்கு அந்தப்படம் சூப்பர்ஹிட்டாக இரண்டு மூன்று தெலுங்கு படங்களில் நடித்தேன். இங்கே எனக்கு ஒன்றிரண்டு படங்கள் வந்தது, ஆனால் நல்ல படம் பண்ணனும் என்று காத்திருந்தேன்.

இந்தப்படத்தில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளேன். மிஷ்கின் இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. நான் ஒரு முஸ்லீம் பெண், இவ்வளவு தூரம் எனக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் நடிகையாக வேண்டும் என்று என் அம்மா ஆசைப்பட்டார். சவரக்கத்தி படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு என் அம்மா அழுதுவிட்டார், நிச்சயம் எனக்கு இந்தப்படம் திருப்புமுனை தரும் என நம்புகிறேன் என்று கூறியபடி கண்கலங்கினார்.

சவரக்கத்தி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பிசிஸ்ரீராம், ரஞ்சித், சசி, பாலாஜி சக்திவேல், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியர் மருது, பிரசன்னா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்