அம்மா வேடத்தில் மிரட்ட வரும் சாந்தி

சுமார் 35 வருடங்களுக்கு முன் தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை சாந்தி கிருஷ்ணா.. தமிழில் ஆறேழு
படங்களுக்கு மேல் நடிக்கவில்லை என்றாலும் கூட 'பன்னீர் புஷ்பங்கள்' சாந்தி என்றால் அவ்வளவு பேமஸ்.. மேலும் மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்தார்.. இவரது திருமண வாழ்க்கை இரண்டு முறை தோல்வியை தழுவியது.. திருமணத்திற்காக சினிமாவை இரண்டுமுறை உதறிய இவர், இப்போது மீண்டும் சினிமா தான் தனது வாழ்க்கை என முடிவெடுத்துள்ளார்.

51 வயதான இவர் இப்போது மலையாள சினிமாவில் அம்மா, அக்கா வேடங்களை குறிவைத்துள்ளார்.. அந்தவகையில் இவருக்கு நிவின்பாலியின் நடிக்கும் 'ஞங்களுட நாட்டில் ஓரிடவேள' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. இதில் டபுள் ஆக்சன் ரோலில் நடிக்கும் நிவின்பாலிக்கு அம்மாவாக நடிக்கிறார் சாந்தி. நிவின்பாலியின் நண்பர் அல்தாப் இந்தப்படத்தை இயக்குகிறார்.. இந்தப்படம் வெளியானால் மலையாளத்தில் அம்மா நடிகையாக சாந்தி முக்கியத்துவம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget