சிக்கன் லாலிபாப்


தேவையானப் பொருட்கள்:
§  சிக்கன் லெக் பீஸ் – எட்டு
§  இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசைகரண்டி
§  உப்பு – தே.அளவு
§  பச்சமிளகாய் – 6 அரைத்து ஊற்றவும்
§  சில்லி சாஸ் – அரை தேக்கரண்டி
§  டொமெட்டோ சாஸ் – அரை தேக்கரண்டி
§  கரம் மசாலா – கால் தேக்கரண்டி
§  மிளகு தூள் – கால் தேக்கரண்டி
§  முட்டை – வெள்ளை கரு இரண்டு
§  மைதா – ஐம்பது கிராம்
§  ரெட் கலர் – ஒரு பின்ச்
§  தண்ணீர் – அரை கப்
§  சர்க்கரை – கால் தேக்கரண்டி
செய்முறை:
§ 
லெக் பீஸை சுத்தம் செய்து கழுவி லெக் சைடில் தோலை எடுத்து குச்சி மட்டும் இருப்பது போல் கட் செய்யவண்டியது(பிடித்து சாப்பிட)
§  சிக்கனில் அனைத்து மசாலாக்களையும் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
§  எண்ணையை காயவைத்து ஒவ்வொரு லாலிபாப்பாக முட்டையின் வெள்ளை கருவை நன்கு நுரை பொங்க அடித்து அதில் முக்கி பொரித்து எடுக்கனும்.
§  பொரித்தெடுத்து தட்டில் அடுக்கி வைத்து உருக்கிய பட்டர் கொஞ்சம், கொத்து மல்லி தழை பொடியாக அரிந்து தூவி பறிமாறவும்.