மெலிவான மேனியழகு…! மறைந்திருக்கும் ரகசியங்கள்

ல்லியான உடலழகை விரும்பாத பெண்களே இல்லை. தனது உடல் கொஞ்சம் குண்டாக இருந்தாலும் நம்மை கண்டுகொள்ள மாட்டார்களோ, கேலி செய்வார்களோ என்று அஞ்சுகிறார்கள். பசியும், பட்டினியுமாக கிடக்கிறார்கள். உடற்பயிற்சி எந்திரங் களுடன் அன்றாடம் மல்லுக்கட்டி வருகிறார்கள்.
உண்மையில் ஒல்லி உடல்தான் அழகா? மெலிவான மேனியைப் பெற பெண்கள் கடைப்பிடிக்கும் வழிகள் சரிதானா? என்பது பற்றி இங்கே சில பிரபலங்கள் பேசுகிறார்கள்.
ஒல்லியாக இருப்பதுதான் அழகா? என்ற கேள்விக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அஞ்சலி பதிலளிக்கிறார்…
“மேலைநாட்டுப் பெண்கள் இயல்பாகவே ஒல்லியாக இருப்பார்கள். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளைப் பார்த்து நம்நாட்டுப் பெண்களும் ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைக்கின்றனர்.
பிரபலமான கம்பெனிகளின் விளம்பர மாடல்கள், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள் மட்டுமன்றி சாதாரண குடும்பப் பெண்கள்கூட ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்று நினைத்து வருகின்றனர். மெலிவான உடலைப் பெறுவதற்காக தங்களுடைய அன்றாட உணவைக் கட்டுப்படுத்துவதும், பசியில்லை என்று கூறும் அனோரெக்ஸியா என்கிற மனோவியாதிக்கு ஆளாவதும் தற்போது சகஜமாகிப் போயிருக்கிறது.”
“உணவின்றி அதிகமாகப் பட்டினி கிடப்பதும் ஒல்லியாக எலும்புந்தோலுமாக இருப்பதும் நமக்கு உகந்தது அல்ல. ஏனென்றால் நமது உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், மலட்டுத்தன்மை இல்லாதிருப்பதற்கும் 12 சதவீத கொழுப்புச்சத்து அவசியம் தேவை. எனவே ஒல்லி உடல் வேண்டுமென்று பட்டினி கிடப்பது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து” என்று எச்சரிக்கையும் செய்கிறார் டாக்டர் அஞ்சலி.
புகைப்பட நிபுணர் விக்ரம் பாவா:
“கொஞ்ச காலத்திற்கு முன்பெல்லாம் ஜீரோ சைஸ் உடல், அனோரெக்ஸியா என்கிற பேச்சிற்கே இடமில்லாது இருந்தது. பத்திரிகைகளும் மீடியாக்களும் தான் ஒல்லியாக இருப்பதையே அழகு என்று மிகையாக காண்பித்து வந்தன. நான் சில ஒல்லி யான பெண்களைப் படம் பிடித்துள்ளேன், ஆனால் அவர்களோ தங்களைப் பருமனான பெண்களாக நினைத்துக் கொண்டு மின்சார எந்திரத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் செய்ய வேண்டியது இவர்களின் உடம்பின் தசை இறுக்கத் திற்கான முறையான உடற்பயிற்சியே.
பழங்கால கிரேக்க ரோமானியச் சிற்பங்களில் பெண்களின் உருவங்கள் ஒல்லியாக இருக்க, நம் நாட்டுப் பெண்களின் உருவங்கள் சற்று குண்டாக சதைப்பிடிப்புடன் அழகுடன் கூடிய கவர்ச்சியுடன் இருப்பதைக் காணலாம். எனவே, இந் தியப் பெண்கள் என்றாலே சற்றுப் பருமனாகத் தோன்றுவதே கண்ணைக் கவரும் கவினுறு அழகு!” என்கிறார் விக்ரம் பாவா யதார்த்தமாக.
மாடல் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்:
“ஜீரோ சைஸ் உடலைப் பெறுவதற்காக பெரும்பாலான இந்தியப் பெண்கள் உணவு உட்கொள்ளாமல் எடையைக் குறைக்கிறேன் என்று பட்டினி கிடக்கின்றனர். ஒருசில பெண்களே சுகாதாரமான ஊட்டச்சத்து எடுத்துக் கொண்டு தங்கள் எடையைக் குறைக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் உலக அழகிப்போட்டியில் பங்கு கொள்வதற்காக அரைகுறையாக சாப்பிட்டு எனது எடையை 48 கிலோவாகக் குறைத்து எலும்பும் தோலுமாகிப் பார்ப்பதற்கே எரிச்சலூட்டும்படியாகத் திகழ்ந்தேன். தற்போது சுகாதாரமான ஊட்டச்சத்து உட்கொண்டு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.
ஒரு சிலர் எனது உடல் எடையை நான் குறைக்க வேண்டும் என்று கூறினாலும் நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. எனது தற்போதைய எடை எனக்கு சவுகரியமாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்!
மேனியழகில் நாட்டம் உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு கூச்சப்படுவார்கள். மாடல்கள் மற்றும் பல வெள்ளித்திரை நடிகைகள் உட்கார்ந்து உண்ணும் திடஉணவை விட, நின்று கொண்டு அருந்தும் திரவ உணவையே பெரிதும் விரும்புகின்றனர். பட்டினி கிடப்பது பெண்களின் எடையைக் குறைக்காது, மாறாக எதிர்மறை விளைவுகளை விளைவிக்கும். `பாலி சிஸ்பிக் ஓவரியன் டிசீஸ்` (பி.சி.ஓ.டி) எனப்படும் கருப்பைக் கோளாறுகளைத் தோற்றுவிக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்!” என்கிறார் நடிகை ஜாக்குலின்.
அழகுக்கலை நிபுணர் ரீட்டா தோடி:
“இந்தியாவில் உள்ள பல பெண்கள் தங்கள் மேனியழகும், கொஞ்சும் இளமையும் தங்களின் உடலில் அமைந்துள்ள எலும்பு களின் வடிவமைப்பைச் சார்ந்தே உள்ளது என்பதை மறந்து விடுகிறார்கள். நான் சந்தித்த 17 முதல் 21 வயதிற்குட்பட்ட மாடலிங் நடிகைகள் பெரும்பாலும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால் அடிக்கடி சோர்வுடனும், களைப்பு டனும் காணப்படுவார்கள். இதனால் இவர்களுக்கு ஒளியிழந்த கண்களும், மெலிந்த உடலும் உண்டாகிறது என்பதை மறந்து போகின்றார்கள். புகை நமக்குப் பகை என்பதைத் தெரிந்து புகையைத் துறந்தால் இவர்களது கவர்ச்சியான மேனியழகு மங்காது என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்!”
தன்னம்பிக்கை பயிற்சியாளர் தியான்னி பாண்டே:
“சைஸ் ஜீரோ என்றொரு உடல் அளவே கிடையாது! உண்மை யில் இந்த அளவு 8 வயது நிறைந்த குழந்தைகளின் நீள உயர பருமன் அளவையே குறிக்கிறது. இப்படி, இல்லாத உடல் அளவுடன் தங்கள் உடல் எடையை ஒப்பிட்டுப் பார்த்து தங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்வது புத்திசாலித்தனமான காரியமாக எனக்குப் படவில்லை.
பல பெண்கள் எப்போதும் தங்கள் உடல் எடை கொழுப்பினைக் குறைப்பது, இறுக்கமான தசைகளைத் தரும் கருவிகளைப் பற்றிச் சிந்திப்பது என்றே காலத்தைக் கழிக்கின்றனர். இவர்கள் முதலில் ஒரு உளவியல் அறிஞரையோ அல்லது மனநலவியல் மருத்துவரையோ அணுகி அறிவுரை பெற வேண்டும்.
நான் இப்படி கூறுவதால் எனக்கு வரும் வாடிக்கையாளர்களில் பலரை இழந்திருக்கிறேன். தங்கள் எடையைக் குறைக்கும் பெண்கள் முதலில் தங்கள் மேனியழகை விட தங்களது வளமான உடல்நலத்தையே கருத்தில் கொள்ள வேண்டும்”
பிரபல நடிகை ஜாரினிகான்:
“தற்போதைய நடிகைகள் ஒல்லியான உடல்அளவைப் பெற முனைந்து தங்கள் உடல் நலத்தினைக் கெடுத்துக் கொள்கி றார்கள். நானும் முதலில் 100 கிலோ எடையுடன் இருந்தவள். தற்போது 64 கிலோவாக எடை குறைந்துள்ளேன். இந்த எடை குறைப்பு எனது உடல்நலத் திற்கு உகந்ததாக இருப்பதற்குக் கார ணம், பெரிய எலும்புள்ள எனது உடல் வடிவமைப்பு தான். ஒருபோதும் நான் ஜீரோ சைஸ் உடல் அமைப்பிற்குள் பிர வேசிக்க முடியாது!” என்கிறார், ஜாரினி கான் தெளிவாக.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் உள்ள மக்களின் உடல்வாகிற்கும், நமது நாட்டுமக்களின் உடல்வாகிற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. ஆதலால் உடல்நலத்தைக் கெடுக்காத உடல் எடைக் குறைவே உன்னதமானது என்பதை நம்நாட்டுப் பெண்கள் உணரவேண்டும்!

 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget