இவருடன் நடிக்க முடியாது என்று ஒரு நடிகை சொல்வது அந்த ஹீரோவிற்கு எவ்வளவு பெரிய அவமானம்? அங்காடித்தெரு படத்தின் மூலம் அறிமுகமாகி இப்போது கரிகாலன் படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் அஞ்சலி தான் அந்த உஷார் நடிகை.
தமிழில் உன்னாலே உன்னாலே உள்ளிட்ட சில படங்களில் நடித்த வினய் தான் டேம் 999 படத்திலும் நடித்துள்ளார். வினய்யின் அடுத்த படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் கேட்ட போது தான் இந்த அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
டேம் 999 படத்தையே தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று போராடினர் திரைத் துறையைச் சார்ந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும். பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் டேம் 999 படத்தினால் ஏற்பட்ட பிரச்சினைக்காக தங்கள் படங்களையே நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த படத்தில் நடித்தவருடன் இணைந்து நடித்தால் தன் சினிமா ஆசை அவ்வளவு தான் என்று உஷாரான அஞ்சலி கால்ஷீட் தரமுடியாது என்று ஒரே போடாக போட்டிருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா சண்டை இருக்கு இதுல படம் நடிக்க சொன்னா என்ன பன்னுவாங்க பாவம்........