அனுஷ்காவுடன் பணிபுரிய நடிகர்கள் மட்டுமல்ல, இயக்குனர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கும் அனுஷ்கா என்றால் ஆனந்தம். அனுஷ்காவின் அதிகபடியான அழகு மட்டும் இதற்கு காரணம் இல்லை. முக்கியமான விஷயம் அவரது டெடிகேஷன். பெரிய ஹீரோயின் என்ற பந்தா இல்லாமல் ஷுட்டிங் தொடங்கும் முன்பே மேக்கப்புடன் முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். அதுவும் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலும் முதலில் மேக்கப்புடன் தயாராவது அனுஷ்காதான்.
படப்பிடிப்புக்கு இவ்வளவு டெடிகேட்டாக எந்த நடிகையும் வருவதில்லை என்று சுராஜ் அனுஷ்காவை புகழ்கிறார். நெ.1 கனவில் இருப்பவர்கள் அனுஷ்காவை பின்பற்றுவது நலம்.