கூகுள், பேஸ்புக்குக்கு தடை வர வாய்ப்பு

கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருக்கும் ஆபாசமான கருத்துக்களை நீக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இன்று டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் தனது நிலையை விளக்கவுள்ளது.


கூகுள் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமானவைகள் போஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து வினய் ராய் என்ற பத்திரிக்கையாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இயேசு கிறிஸ்து,
முகம்மது நபி மற்றும் பல்வேறு இந்து கடவுகள்களின் ஆபாச சித்திரங்கள் கூகுள் மற்றும் பேஸ்புக்கில் வெளியிடப்படுவதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.


இதையடுத்து டெல்லியில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கூகுள், பேஸ்புக் உள்பட 21 இணையதளங்கள் மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதை எதிர்த்து கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகின.


இந்த மனுக்கள் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் கெய்ட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது பேஸ்புக் இந்தியா மற்றும் கூகுள் இந்தியா நிறுவனங்களின் சார்பில் அவர்களது வக்கீல்கள் ஆஜராகினர். மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சண்டியோக் ஆஜரானார்.


அப்போது கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் வக்கீல்கள் வாதிடுகையில், பல லட்சம் பேர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் சிலர் ஆபாச செய்திகளைப் போட்டு விடுகின்றனர். அவற்றைத் தனித் தனியாக கண்காணித்து நீக்க முடியாது. அது சாத்தியமும் அல்ல. மனுதாரர் குறிப்பிட்ட புகார் எதையாவது கூறினால் அதை எங்களது அமெரிக்க தலைமை நிறுவனத்திடம் சொல்லி நீக்க முயற்சிப்போம் என்றனர்.


இதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கெய்ட், சமூக வளைதளங்களில் ஆபாசமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தால், அதை நீக்க முடியாது என்று அவை கூறினால், சீனாவைப் போன்று இந்தியாவிலும் கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவை மூடப்படும் என்று எச்சரித்தார். மேலும் கீழ் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்கவும் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.


இதையடுத்து டெல்லி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வ்நதது. அப்போது மார்ச் மாதம் 13ம் தேதி


கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் 21 பிரதிநிதிகள் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி சுதேஷ் குமார் உத்தரவிட்டார்.


இதற்கிடையே இணையதளங்களில் ஆபாசமானவை போஸ்ட் செய்வதை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்த அரசின் கொள்கை அறிக்கையை மத்திய அரசு இன்று மதியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றது. இதன் மூலம் பேஸ்புக், கூகுள் போன்றவற்றுக்கு இந்தியாவில் தடை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget